Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th January 2024 20:05:21 Hours

சுகாதாரத் துறை வேலைநிறுத்தம் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு இராணுவத்தினர் ஒத்துழைப்பு

சுகாதார அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் சுகாதாரத் துறையில் உள்ள சிறு ஊழியர்களின் தொழிற்சங்கங்களின் நாடளாவிய வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட அரசாங்க வைத்தியசாலைகளில் இன்று (ஜனவரி 11) அத்தியாவசிய சுகாதார சேவைகள் சுமூகமாக இயங்குவதற்கு தமது படையினரை நிலைநிறுத்தியுள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலை, கண்டி பொது வைத்தியசாலை, களுபோவில போதனா வைத்தியசாலை, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை, மஹமோதர போதனா வைத்தியசாலை, பேராதனை போதனா வைத்தியசாலை, குருநாகல் போதனா வைத்தியசாலை, பொலன்னறுவை பொது வைத்தியசாலை மற்றும் மாத்தறை, பலாங்கொடை, எஹலியகொட, நாவலப்பிட்டி, கம்பளை, மொனராகலை, மீரிகம மற்றும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலை ஆகிய அரச வைத்தியசாலைகளில் பாதுகாப்பு படை தலைமையகங்களின் மேற்பார்வையின் கீழ் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் இன்றி சுகாதார சேவைகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், அவசரநிலை ஏற்பட்டால் மேலதிக இராணுவத்தினரை அனுப்புவதற்கு தேவையான படையினரை தயர் நிலையில் வைத்திருக்குமாறு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதிகளுக்கு இராணுவத் தளபதி பணிப்புரை விடுத்துள்ளார்.