Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th January 2024 19:15:26 Hours

இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படைத் தளபதி இலங்கை இராணுவ மகளிர் படையலகுகளுக்கு விஜயம்

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணி, 3 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணி மற்றும் 7 வது இலங்கை இராணுவ மகளிர் படையணிகளுக்கு 2024 ஜனவரி 07 மற்றும் 08 ம் திகதி உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

வருகை தந்த பிரதம அதிதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் கட்டளை அதிகாரிகளால் அன்புடன் வரவேற்கப்பட்டார். இந்த விஜயத்தின் போது படைத் தளபதி படையினர் மத்தியில் உரையாற்றியதுடன் அனைத்து நிலையினருடான தேநீர் விருந்துபசாரங்கள் மற்றும் குழு படம் எடுத்ததிலும் கலந்துகொண்டார்.