Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th January 2024 18:45:52 Hours

இயந்திரவியல் காலாட் படையணி பயிற்சிப் பாடசாலையின் புதிய தளபதி பதவியேற்பு

இயந்திரவியல் காலாட் படையணியின் கேணல் டி.எஸ் வல்பிட்டகமகே ஆர்எஸ்பீ அவர்கள் வவுனியா இயந்திரவியல் காலாட் படையணி பயிற்சிப் பாடசாலையின் புதிய தளபதியாக ஜனவரி 7 வியாழக்கிழமை மத அனுஷ்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமைகளை பொறுப்பேற்றார்.

இயந்திரவியல் காலாட் படையணி பயிற்சிப் பாடசாலையின் அதிகாரிகள் முன்னிலையில் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டு கடமையை பொறுப்பேற்றுகொண்ட அவர் படையினருக்கு உரையாற்றியதுடன்,இயந்திரவியல் காலாட் படையணி பயிற்சிப் பாடசாலையின் எதிர்கால தனது வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக விளக்கினார்.