Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th January 2024 16:14:50 Hours

இயந்திரவியற் காலாட் படையணி படையினரால் 100 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள்

இயந்திரவியற் காலாட் படையணி படையினரின் ஒருங்கிணைப்பில் தம்புலு ஹல்மில்லவெவ பாடசாலையின் தகுதியான 100 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் காலணிகள் வழங்கும் நிகழ்வு 2023 டிசம்பர் 02 அன்று படையணி தலைமையகத்தில் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் பொதுபணி பணிப்பாளர் நாயகமும் இயந்திரவியற் காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்.ஜி.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சி.பி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்த சிந்தனைமிக்க முயற்சிக்கு கண்டி தர்மராஜா கல்லூரியின் 86ம் ஆண்டு சா/த (88ம் ஆண்டு உ/த) குழு நிதியுதவி வழங்கியதுடன், இயந்திரவியற் காலாட் படையணி இத் திட்டத்தின் வெற்றிக்கு பங்களித்தது.