Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th January 2024 19:10:57 Hours

குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையில் ஸ்னைப்பர் பயிற்சி நிறைவு

தியத்தலாவ குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையில் பதினொரு மாதங்கள் நீடித்த துப்பாக்கி சுட்டு பயிற்சியின் விடுகை மற்றும் சின்னம் வழங்கும் நிகழ்வுடன் பயிற்சி நிறைவு பெற்றது. குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபீ காரியவசம் அவர்களின் அழைப்பின் பேரில் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

பிரதம அதிதி சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கி பட்டதாரிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். 02 அதிகாரிகள் மற்றும் 16 சிப்பாய்கள் துப்பாக்கி சுட்டு வீரர்களாக தகுதி பெற்றனர் மற்றும் பின்வரும் அதிகாரி மற்றும் சிப்பாய்களுக்கு பிரதம அதிதியின் சிறப்பு விருது வழங்கப்பட்டது:

சிறந்த துப்பாக்கி சுட்டு வீரர் - விஜயபாகு காலாட் படையணியின் கெப்டன் டபிள்யூகேஎம் பிரதீப் குமார.

சிறந்த உடற் தகுதி - கொமாண்டோ படையணியின் லான்ஸ் கோப்ரல் பீஎஸ் ரூபசிங்க.

களப் பயிற்சி மற்றும் சகலதுறையில் சிறந்த மாணவன் - கொமாண்டோ படையணியின் லான்ஸ் கோப்ரல் கேஎச்எஜீ நிரோஷன்.