Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd January 2024 16:41:03 Hours

11 வது காலாட் படைப்பிரிவு தளபதியின் உத்தியோகபூர்வ விஜயம்

11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்.எம்.எம் ரணசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 29), பல்லேகலை 5 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணிக்கு தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

வருகை தந்த காலாட் படைப்பிரிவின் தளபதியை 5 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மரியாதை செலுத்தி வரவேற்றதுடன், படைப்பிரிவின் தளபதி படையினருக்கு உரையாற்றுவதற்கு முன்னர், படையலகின் தற்போதைய பங்கு மற்றும் பணிகள் பற்றிய விரிவான விளக்கத்தை பொற்றுக் கொண்டார்.

படையினருக்கான உரையைத் தொடர்ந்து, 5 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் பாதுகாப்புப்பில் உள்ள விக்டோரியா, ரன்தெனிகல, மற்றும் ரன்டபே நீர் மின் நிலையங்களுக்கு தளபதி விஜயம் செய்தார்.