Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd January 2024 16:39:27 Hours

56 வது காலாட் படைப்பிரிவில் 2024 புது வருட நிகழ்வு

56 வது காலாட் படைப்பிரிவில் கொடி ஏற்றல், அரச பிரமாணம் வாசித்தல், தேசிய கீதம் மற்றும் இராணுவ கீதம் இசைத்தல், மற்றும் தளபதியின் புத்தாண்டு உரை ஆகியவற்றுடன் திங்கட்கிழமை (01) காலை 2024 புத்தாண்டு கடமைகள் ஆரம்பிக்கப்பட்டன.

விழாவைத் தொடர்ந்து, அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரம் இடம்பெற்றது. இதன்போது, 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதியினால், படைப்பிரிவின் அர்ப்பணிப்புள்ள சிவில் ஊழியர்களுக்கு விசேட பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டன.