Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd January 2024 16:37:11 Hours

21 வது காலாட் படைபிரிவு தளபதி 9 மற்றும் 5வது (தொ) கஜபா படையணிகளுக்கு விஜயம்

21 வது காலாட் படைபிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஐஏஎன்பி பெரேரா ஆர்டப்ளியுபீ யுஎஸ்பீ என்டியு பீஎஸ்சி 9 மற்றும் 5 வது (தொ) கஜபா படையணிகளுக்கு 13 டிசம்பர் 2023 அன்று செயற்பாடுகள், வழங்கல் மற்றும் நிர்வாக விடயங்கள் தொர்பான பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.

அவரை அந்தந்த படையலகுகளின் கட்டளை அதிகாரிகள் வருகை அன்புடன் வரவேற்றனர். பின்னர், ஒவ்வொரு படையலகுகளிலும் படையினருக்கு தளபதி உரையாற்றுவதற்கு முன், கட்டளை அதிகாரிகள் அவர்களின் தற்போதைய பங்கு மற்றும் பணிகள் குறித்து ஒரு விரிவான விளக்கத்தை வழங்கினர்.

அவரது உரையைத் தொடர்ந்து, முகாம் வளாகத்திற்குச் சென்று படையினருடன் சுமுகமாக உரையாடியதுடன், படையணிகளின் சீரான செயல்பாட்டை மேம்படுத்துவதற்குத் தேவையான வழிகாட்டுதல்களை கட்டளை அதிகாரிகளுக்கு வழங்கினார்.

தளபதியின் உத்தியோகபூர்வ விஜயத்திற்கு முன்னதாக, தளபதியின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுறுத்தல்களின் கீழ் 21 காலாட் படைபிரிவின் பணிநிலை அதிகாரிகள் குழு அந்தந்த படையலகுகளின் செயல்பாட்டு, வழங்கல் மற்றும் நிர்வாக சிக்கல்களைக் கண்டறிந்து சீர் செய்யும் பொருட்டு நிர்வாக ஆய்வு நடத்தியது.