Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd January 2024 15:41:24 Hours

பிரதி பதவி நிலை பிரதானி கம்புருபிட்டிய அபிமன்சல 2 க்கு விஜயம்

பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சீஎல்எஸ் அவர்கள் 2024 புத்தாண்டை முன்னிட்டு சிரேஷ்ட அதிகாரிகள் குழுவுடன் கம்புருபிட்டிய அபிமன்சல 2 நல விடுதியில் வசிக்கும் போர் வீரர்களின் நலம் விசாரிக்கும் நோக்கத்துடன் செவ்வாய்க்கிழமை ஜனவரி 02 விஜயம் மேற்கொண்டார்.

வருகை தந்த பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி இராணுவ சம்பிரதாயத்திற்கு அமைய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து நுழைவாயிலில் போர் வீரர் ஒருவரால் வரவேற்கப்பட்டார். இவ் விஜயத்தின் போது, சிரேஷ்ட அதிகாரிகள் வைத்தியசாலைக்கு விஜயம் செய்து, சிகிச்சை பெற்று வரும் போர் வீரர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு புத்தாண்டு பரிசுகளை வழங்கினர்.

இந்நாளில் நினைவுகளைச் சேர்க்கும் வகையில், பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் போர் வீரர்களுடன் குழு படங்கள் எடுத்துகொண்டனர். அன்றைய நிகழ்ச்சியின் நிறைவாக, மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சீஎல்எஸ் அவர்கள் விருந்தினர் பதிவேட்டில் சில பாராட்டுக் குறிப்புகளை பதிவிட்டார்.