Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd January 2024 11:45:30 Hours

புதிய வருடத்தில் இராணுவத் தளபதி ‘மிஹிந்து செத் மெதுரவிற்க விஜயம்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 2024 புத்தாண்டின் தனது முதல் பணியில் அத்திடிய மிஹிந்து செத் மெதுரவிற்கு செவ்வாய்க்கிழமை 2024 ஜனவரி 02 விஜயம் செய்து போர் வீரர்களை சந்தித்தார்.

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் எம்கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ, நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, இராணுவ செயலாளரும் மேற்கு பாதுகாப்பு படைத் தலையைக தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்டப்ளியுஎம் பெர்னாண்டோ டப்ளியுடப்ளயுவீ ஆர்டப்ளியுவீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி, மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும் இவ் விஜயத்தின் போது கலந்துகொண்டனர். அன்றைய பிரதம அதிதியின் வருகையின் பின்னர், மிஹிந்து செத் மெதுர நுழைவாயிலில் இராணுவ சம்பிரதாயங்களுக்கு இணங்க பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்படுவதற்கு முன்னர் போர்வீரர் ஒருவர் இராணுவத் தளபதியை வரவேற்றார்.

ஆரம்பத்தில், இராணுவத் தளபதி, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் இணைந்து மிஹிந்து செத் மெதுரவில் உள்ள விடுதிகளுக்குச் சென்று, அங்கு வசிக்கும் போர்வீரர்களின் நலன்களைக் கேட்டறிந்து சில வார்த்தைகளைப் பரிமாறிக்கொண்டார். அதேநேரம், புத்தாண்டு வாழ்த்துச் சின்னமாக அந்த போர்வீரர்களுக்கு சிறப்பு பரிசுப் பொதிகளையும் வழங்கினார். தேநீர் விருந்துபசாரத்தின் போது தளபதி படையினருடன் உரையாடியதுடன், போர் வீரர்களுக்கு மற்றுமொரு பரிசு பொதியையும் வழங்கினார்.

இராணுவத் தளபதி தனது உரையின் போது, அனைத்து போர்வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் புதிய நம்பிக்கைகள், அமைதி, மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் ஆரோக்கியம் நிறைந்த புத்தாண்டு அமைய நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் முடிவில், போர் வீரர் ஒருவர் இராணுவத் தளபதிக்கு சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கினார், மேலும் அவர் புறப்படுவதற்கு முன்னர் தளபதி விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் பாராட்டுக் குறிப்புகளை பதிவிட்டார்.