Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th December 2023 16:16:30 Hours

கஜபா படையணியன் முன்னாள் படைவீரர் இராணுவத் தளபதியை சந்திப்பு

கஜபா படையணியின் சிரேஷ்ட அதிகாரிகளின் ஒருவரான முன்னாள் படைவீரர் பிரிகேடியர் சீஆர்எம் சில்வா (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் இன்று (28 டிசம்பர்) பிற்பகல் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை மரியாதை நிமித்தம் இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.

பிரதான நுழைவாயிலில், இராணுவத் தளபதியின் முன்னாள் கட்டளை அதிகாரியான வருகை தந்த சிரேஷ்ட படைவீரரை இராணுவத் தளபதி அன்புடன் வரவேற்றார். இதையடுத்து, இராணுவத் தலைமையகத்தில் அவருக்கு உரிய மரியாதை அளிக்கும் வகையில், பதவி நிலை பிரதானி, பிரதி பதவி நிலை பிரதானி, சிரேஷ்ட பணிநிலை அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடன் குழு படம் எடுத்துக்கொண்டனர்.

பிரிகேடியர் சீஆர்எம் சில்வா (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் கஜபா படையணியின் பெருமைமிக்க தயாரிப்புகளில் ஒருவராக ஏப்ரல் 2006 இல் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார். இவர் செயல்பாட்டு, நிர்வாக மற்றும் கல்வி நிலைகளில் குறிப்பிடத்தக்க சேவையை வழங்கியுள்ளார்.

இச் சந்திப்பில் இராணுவத் தளபதி தனது 26 ஆண்டுகளுக்கும் மேலான பணிக்காலத்தின் போது மாறுபட்ட மற்றும் பொறுப்பான நியமனங்களை இராணுவத்திற்கு வழங்கிய ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரியின் மதிப்புமிக்க பங்களிப்பை பாராட்டினார். வருகை தந்த சிரேஷ்ட அதிகாரிக்கு நினைவுப் சின்னம் வழங்கி வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இராணுவத் தளபதியுடனான சுமுக உரையாடலின் பின்னர், பிரிகேடியர் சீஆர்எம் சில்வா (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் இராணுவ தலைமையக வளாகத்திற்குள் கள விஜயம் மேற்கொண்டார். இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ, பொதுபணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்.ஜி.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சி.பி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ மற்றும் செயற்பாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்ஏஎன்டி எதிரிசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஆகியோரும் இத் திட்டத்தில் கலந்து கொண்டனர்.