Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th December 2023 22:27:02 Hours

இராணுவ போர் கல்லூரியில் 'ஐந்தாம் தலைமுறை போர் மற்றும் சவால்களின் தாக்கம்' பற்றிய கலந்துரையாடல்

புத்தள இராணுவப் போர்க் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 12) இராணுவப் போர்க் கல்லூரி மாநாடு 2023 நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் உள்ள இராணுவத் தலைவர்கள், அறிஞர்கள் மற்றும் நிபுணர்கள் ஒன்றாக அமர்ந்து ‘ஐந்தாம் தலைமுறைப் போரின் தாக்கம் (உணர்தல் மற்றும் தகவல்) மற்றும் இலங்கைச் சூழலில் இராணுவத்திற்கான சவால்கள்’ என்ற தலைப்பில் கலந்துரையாடினர்.

இரண்டு இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்ற இந்த இரண்டு நாள் மாநாட்டில் இராணுவ தளபதியின் ஆசீர்வாதம் கிடைத்தது. இது இராணுவப் போர்க் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் யூ.கே.டி.டி.பீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்களினால் ஒழுங்கமைக்கப்பட்டதுடன். நவீன போர்முறையின் பரிணாம வளர்ச்சியில் விமர்சன விவாதங்கள், புதுமையான யோசனைகளின் பரிமாற்றம் மற்றும் விலைமதிப்பற்ற நுண்ணறிவுகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டது.

முக்கிய கருப்பொருளின் கீழும் ஐந்து துணைக் கருப்பொருள்களின் கீழும் ஐந்து அமர்வுகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. அங்கு சிறந்த செயலமர்வு தலைவர்கள் மற்றும் பேச்சாளர்கள், தங்கள் உரைகளால் அமர்வுகளை வளப்படுத்தியதுடன் நடைமுறை தீர்வுகளை அடைய அமர்வுகளின் துணைக் கருப்பொருள்களை அடிக்கோடிட்டுக் காட்டினார்கள்.

மாநாட்டின் போது விரிவாக விவாதிக்கப்பட்ட தலைப்புகள் பின்வருமாறு 'ஐந்தாம் தலைமுறை போர் மற்றும் அரசாங்கத்திற்கான சவால்கள் (இராணுவம் மற்றும் அரசியல் பாதுகாப்பு வரை)', 'நவீன போரின் பரிணாமம் மற்றும் ஐந்தாம் தலைமுறை போரின் முக்கியத்துவம்', 'ஐந்தாம் தலைமுறை போர்முறைகளின் இயக்கவியல் மற்றும் தாக்கம்' , 'முக்கியமான தொழிநுட்பங்களும் அதன் தாக்கமும்', 'வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், உயர் முறைமைகள் மற்றும் செயலிகள் முழுவதிலும் உள்ள விளைவுகள்', 'இலங்கை நடவடிக்கை சூழல் மற்றும் சவால்களில் உணரப்பட்ட மாற்றங்கள்', 'இராணுவ வழிகாட்டுதல்களை உருவாக்குவதற்கு ஆதரவான இராணுவ உத்திகள்', 'இராணுவ வழிகாட்டல்' உலகளாவிய சிறந்த நடைமுறைகள், சாத்தியமான வழிகாட்டுதல்கள் மற்றும் சட்டரீதியான தாக்கங்கள்', 'இராணுவ உத்திகளை உருவாக்குவதற்கான திட்டமிடல்/வளர்ந்து வரும் பாதுகாப்பு நிலப்பரப்புக்கான விண்ணப்பம்', 'சிக்கலான செயல்பாட்டுச் சூழலில் தலைமைத்துவம் மற்றும் முடிவெடுத்தல்', 'மிகப்பூர்வ வளர்ச்சிக்கான கூட்டு அணுகுமுறையை உருவாக்குதல். ' , 'வெவ்வேறு பங்குதாரர்களின் பொறுப்புகள் மற்றும் சிக்கலான சூழலை எதிர்கொள்ளும் திறன்களை மேம்படுத்துதல்', 'இலங்கை இராணுவத்திற்கான உணர்தல்', 'இலங்கை அனுபவங்கள் மற்றும் இராணுவத்தின் பாத்திரம் ஆகியவற்றுடன் தொடர்புடைய கருத்து மாற்றத்தின் நவீன பரிமாணங்களிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்' மற்றும் 'சிக்கலான செயல்பாடுகள்' ஒற்றுமையை அடைவதற்கான கட்டளையில் உள்ள சவால்கள்.'

மொத்தமாக, வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த 16 நிபுணநர்கள் தங்கள் கருத்துக்களை அந்தந்த அமர்வுத் தலைவர்களுடனும் பத்து பேச்சாளர்களுடனும் பகிர்ந்து கொண்டனர், முக்கிய உரையில் உள்ள உள்ளடக்கங்கள் தொடர்பாக அந்த கருப்பொருள் புள்ளிகள் குறித்து தனித்தனியாக கருத்துத் தெரிவித்தனர்.

மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியும் இராணுவ புலனாய்வுப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.கே.எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ, பொதுபணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்.ஜி.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சி.பி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, 59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே தொலகே யூஎஸ்பீ, பீஎஸ்சி, 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ சந்திரசிறி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி, இலங்கை இராணுவ பிரதம களப் பொறியியலாளர் மேஜர் ஜெனரல் எஸ்.ஏ குலதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சி, பிராண்டிக்ஸ் அப்பரல் நிறுவனத்தின் சிரேஷ்ட நிர்வாகியும் மனிதவள முகாமைத்துவ குழு தலைவருமான மேஜர் ஜெனரல் ஜி.வீ.டி.யூ.ஏ பெரேரா (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ யூஎஸ்ஏடபிள்யூசி பீஎஸ்சி, இலங்கை கடற்படையின் முன்னாள் பதவிநிலைப் பிரதானியும் ஹைட்ரோகிராபி/சர்வதேச தலைமை ஆலோசகருமான ரியர் அட்மிரல் வை.என் ஜயரத்ன (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சி, ஐ.நா.வின் இலங்கைக்கான தூதரகத்தின் நிரந்தர இராணுவ ஆலோசகர் பிரிகேடியர் எஸ்.பி விக்கிரமசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி, யூஎஸ்பீ பீஎஸ்சி, இலங்கை இராணுவ ஆராய்ச்சி, கருத்து மற்றும் கோட்பாட்டு பணிப்பாளர் பிரிகேடியர் பீ.சி.எல் குணவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சி, இலங்கை விமானப்படையின் ஒழுக்கப்பணிப்பாளர் நாயகமும் சட்டத்தரணியும் பொது நொத்தாரிசும் மனிதவள முகாமைத்துவ பட்டய நிறுவன உறுப்பினரும் சட்டத்ணிகள் சங்க உறுப்பினருமான ஏர் கொமடோர் வீ.டி.எஸ் சிறிமான்ன யூஎஸ்பீ எம்சிஆர் எம்பீஎம் எம்டிஎஸ் பீஜடி (ஐஆர்) எல்எல்பி ஏஎன்டிஎச்ஆர்எம் என்டிசி பீஎஸ்சி, பாதுகாப்பு அமைச்சின் போர் தகவல் தலைமையகம் மற்றும் சைபர் பாதுகாப்பு பணிப்பாளர் கேணல் கே.வீ.பீ தம்மிக யூஎஸ்பீ பீடிஎஸ்சி, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழகத்தின் கல்லூரியின் குற்றவியல் துறைத் தலைவரும் சட்டத்தரணியுமான இராணுவ மகளிர் படையணியின் லெப்டினன் கேணல் துஷார கத்ரியாராச்சி (ஓய்வு), புகழ்பெற்ற பாதுகாப்பு ஆய்வாளர் திரு. நிலாந்தன் நிருதன் (விசேட உரை), ஹூவாய் டெக்னாலஜிஸ் லங்கா தனியார் நிறுவனத்தின் மூலோபாய ஆலோசகர்/ உப தலைவர் திரு இந்திக டி சொய்சா, சிக்ரா ஹோல்டிங்ஸ் குழுவின் பணிப்பாளர்/தலைமை நிர்வாக அதிகாரி திரு போஷன் தயாரத்ன, டெல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் உள்நாட்டு பொது நிர்வாக அதிகாரி திரு. வருண ஜயலத் மற்றும் கொத்தலாவல கல்வியியற் கல்லூரியின் பொறியியல் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் துஷார வீரவர்தன ஆகியோர் அமர்வுகளுக்கு பங்களித்தனர்.

அனைத்து பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பன்முகப்படுத்தப்பட்ட பார்வையாளர்கள் மற்றும் ஏனைய பங்கேற்பாளர்கள் ஜூம் தொழில்நுட்பத்தின் மூலம் இணைக்கப்பட்டிருந்தனர்.

மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியும் இராணுவ புலனாய்வுப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.கே.எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் இராணுவத் தலைமையகத்திலிருந்து ஆரம்ப உரையை நிகழ்த்தினார்.

இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற ஏற்பாட்டில் இராணுவ போர் கல்லூரியின் தளபதி, தலைமைப் பயிற்றுவிப்பாளர் மற்றும் பணிநிலை அதிகாரிகள் உட்பட இராணுவத் தலைமையகத்தில் உள்ள பல முதன்மைப் பணிநிலை அதிகாரிகள் மற்றும் பணிப்பாளர்களும் கலந்துகொண்டனர். மேலும், இராணுவ போர் கல்லூரியின் பிரதித் தளபதி, சிரேஷ்ட கட்டளைப் பாடநெறி 9 மற்றும் கனிஷ்ட கட்டளைப் பாடநெறி 28 இன் மாணவ அதிகாரிகள், சிரேஷ்ட தளபதிகள் மற்றும் நிரந்தரப் பணியாளர்கள் புத்தள இராணுவ போர் கல்லூரியிலிருந்து நிகழ்நிலையில் இணைந்து கொண்டனர்.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு பாதுகாப்பு படைத்த தலைமையகத்திலிருந்தும் 1500 பேர் நிகழ்நிலையில் மாநாட்டில் இணைந்துக் கொண்டனர்.

ஒவ்வொரு அமர்வின் முடிவிலும், அனைத்து அறிவாளர்களுக்கும் பாராட்டும் விதமாக நினைவுச் சின்னங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இராணுவ போர் கல்லூரியின் 2023 இன் மாநாட்டை நடாத்துவதற்கு உதவிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் எச்.எல்.வீ.எம் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களுக்கு இராணுவ போர் கல்லூரியின் பிரதித் தளபதி நன்றி கூறியதுடன், இலங்கை இராணுவத்தின் பொதுபணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்.ஜி.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூஎம்.சி.பி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, இராணுவ தலைமையகத்தின் பணியாளர்கள், பொதுபணி அலுவலகத்தின் பணியாளர்கள், பயிற்சி பணிப்பகம், ஊடக பணிப்பகம் மற்றும் அனைத்து பணிப்பகங்களின் முதன்மைப் பணிநிலை அதிகாரிகள் உட்பட இராணுவப் போர்க் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் யூ.கே.டி.டி.பீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி, மாநாட்டு செயலகம், அர்ப்பணிப்புக் குழு மற்றும் இராணுவப் போர்க் கல்லூரியின் பணியாளர்களுக்கும் நன்றி தொரிவித்தார்.