Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th December 2023 15:58:31 Hours

புதிய இராணுவ பதவி நிலை பிரதானி இராணுவ தலைமையகத்தில் கடமை பொறுப்பேற்பு

அண்மையில் பதவி நிலை பிரதானியாக நியமிக்கப்பட்ட கஜபா படையணியின் மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.கே.எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் புதன்கிழமை (20) இராணுவத் தலைமையகத்தில் உள்ள தனது புதிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது கடமை பொறுப்பேற்றார்.

'மகா சங்க' உறுப்பினர்களின் 'செத்பிரித்' பாராயணங்களுடன் மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.கே.எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் தனது அலுவலகத்தை ஏற்றுக்கொண்டதை குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார். பின்னர், இராணுவ பதவி நிலை பிரதானி பிக்குகளுடன் உரையாடியதுடன், பௌத்த தேரர்களுக்கு ‘பிரிகர’ மற்றும் ‘கிலான்பச’ வழங்கினார்.

இந்த புதிய நியமனத்திற்கு முன்னர் மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.கே.எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியாக பணியாற்றினார்.

புதிய நியமன நிகழ்வில் பிரதி பதவி நிலை பிரதானி உட்பட சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், இராணுவ பதவி நிலை பிரதானி அலுலகத்தின் பணிநிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.

மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.கே.எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களின் சுருக்கமான விவரம் பின்வருமாறு

1969 ஜூன் 6 ஆம் திகதி பிறந்த இவர் பாணந்துறை புனித அந்தோனியார் ஆண்கள் பாடசாலை மற்றும் கொழும்பு தர்ஸ்டன் கல்லூரியின் பழைய மாணவராவார். பாடசாலை கல்வியின் போது கல்வியிலும், தடகளத்திலும் சிறந்து விளங்கி பாடசாலைக்கும் கௌரவத்தினையும் புகழையும் பெற்றுகொடுத்தவர்.

அவர் 1988 ஜூலை 26 ஆம் திகதி பாடநெறி 30 இல் பயிலிளவல் அதிகாரியாக இலங்கை இராணுவத்தில் இணைந்தார். தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் அடிப்படை இராணுவ பயிற்சியினை வெற்றிகரமாக முடித்த பின்னர் 1990 ஜூன் 09 அன்று இலங்கை இராணுவத்தின் நேர்த்தியான படையணியான கஜபா படையணியில் இரண்டாம் லெப்டினன் நிலையில் நியமிக்கப்பட்டார். இராணுவத்தில் பணிபுரிந்த காலப்பகுதியில் தொடர்ந்து நிலை உயர்வுகளை பெற்ற அவர், 07 பெப்ரவரி 2021 மேஜர் ஜெனரலாக நிலை உயர்தப்பட்டார்.

அவரது இராணுவ வாழ்க்கையில் கட்டளை மற்றும் பணிநிலை நியமனங்களில் பணியாற்றியுள்ளதுடன் இலங்கை இராணுவத்தில் அந்தந்த நியமனங்களில் அவரது அசாதாரண திறன்களை எடுத்துக்காட்டுகிறது. மே 2009 க்கு முன்னர் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் மனிதாபிமான நடவடிக்கையின் போது போர் கடமைகளை வழங்குவதில் அர்ப்பணிப்புடன் சேவையளித்தார்.

அவர் அணி தலைவர், அதிகாரி கட்டளை, மேஜர் ஜெனரல் எஸ்.டி.டி ஜெயசுந்தர (ஓய்வு) அவர்களின் இராணுவ உதவியாளர், இராணுவ பயிற்சி பாடசாலை நிறைவேற்று அதிகாரி, செயற்பாட்டு மற்றும் பயிற்சி படையணி தளபதி, மருதானை போர்கருவி படையணி கள பாதுகாப்பு அதிகாரி, 21 வது காலாட் படைப்பிரிவின் பொதுப்பணி அதிகாரி-II, 3 வது கஜபா படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி, உபகரண பணிப்பாளர் பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரி-II, ஆளனி நிர்வாக பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரி-II, போக்குவரத்து முகாம் அனுராதபுரம் பணிநிலை அதிகாரி-II, பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர், 8 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி, 522 வது காலாட் பிரிகேடின் பிரிகேட் தளபதி, கஜபா படையணி தலைமையக நிலைய தளபதி, போக்குவரத்து பணிப்பக பணிப்பாளர், 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, இராணுவ ஆலோசகர் ஐக்கிய நாடுகளின் தலைமையகம் நியூயார்க்,மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மற்றும் இராணுவ புலனாய்வு படையணி படைத்தளபதி ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.

மேஜர் ஜெனரல் டபிள்யூ எச்.கே.எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்கள் படையலகு கட்டளை அதிகாரி பாடநெறி, படையலகு ஆதரவு ஆயுத பாடநெறி,அடிப்படை பாராசூட் பாடநெறி, ஏயர் மொபைல் பாடநெறி, கனிஷ்ட அதிகாரி பாடநெறி இந்தியா,கனிஷ்ட கட்டளை அதிகாரி பாடநெறி இந்தியா, கேப்ஸ்டோன் உடற்பயிற்சி ‘ஷாண்டி பிரயாஸ்’ – நேபாளம், சிரேஷ்ட கட்டளை பாடநெறி இந்தியா, பாதுகாப்பு ஆய்வுகளுக்கான ஆசிய பசிபிக் மையம் விரிவான நெருக்கடி முகாமை கருத்தரங்கு - ஹொனலுலு - ஹவாய் மற்றும் சீனா பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் திட்டம் ஆகிய பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாடநெறிகளை பயின்றுள்ளார்.

சிரேஷ்ட அதிகாரி போர்க்களங்களில் அவரது வீரம் மற்றும் துணிச்சலான நடத்தைக்காக 'ரண விக்கிரம பதக்கம்'(ஆர்டப்ளியூபீ), 'ரண சூரபதக்கம்'(ஆர்எஸ்பீ) மற்றும் இராணுவத்திற்கு அவர் ஆற்றிய சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் வகையில், விஷேட சேவை பதக்கம் (வீஎஸ்வீ) ஆகிய விருதுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் இராணுவ புலனாய்வு படையணியின் படைத்தளபதியாக கடமையற்றுவதுடன் திருமதி திலுப பீரிஸ் அவர்களை மணந்து மூன்று பெண் பிள்ளைகளால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளார்.