Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th December 2023 20:22:44 Hours

தொண்டர் படையணி பயிற்சிப் பாடசாலையில் அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் சாஜன்களுக்கு புதிய வசதி

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, அவர்கள் இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் யு.டி. விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி மற்றும் இலங்கை இராணுவத் தொண்டர் படையணி பயிற்சிப் பாடசாலையின் தளபதி கேணல் ஜேஏஜே ஜயரத்ன கேஎஸ்பீ ஆகியோரின் அழைப்பின் பேரில் இன்று காலை (16) தியத்தலாவ இலங்கை இராணுவத் தொண்டர் படையணி பயிற்சிப் பாடசாலையில் அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் சாஜன்களுக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட உணவக திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

17 வது இராணுவ பொறியியல் சேவைகள் படையணியின் படையினர் இலங்கை இராணுவத் தொண்டர் படையணி பயிற்சிப் பாடசாலையின் படையினர் இணைந்து அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் சாஜன்களுக்கான உணவக கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக தங்களின் மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப திறன்களை வழங்கியதுடன், இதில் ஒரு விசாலமான உணவக அறை, தொலைக்காட்சி அறை, சமையலறை மற்றும் பார்வையாளர்கள் அறை என்பன காணப்படுகின்றன.

இலங்கை இராணுவத் தொண்டர் படையணி பயிற்சிப் பாடசாலையின் நுழைவாயிலில், பயிற்சிப் பாடசாலையின் தளபதி கேணல் ஜேஏஜே ஜயரத்ன அவர்கள் இராணுவத் தளபதியை வரவேற்றதுடன், வருகை தந்த தளபதியை கௌரவிக்கும் வகையில் இலங்கை இராணுவத் தொண்டர் படையணி பயிற்சிப் பாடசாலையின் படையினரால் வாகன தொடர் அணி மரியாதை வழங்கப்பட்டது.

பின்னர் இராணுவத் தளபதி ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் சாஜன்களுக்கான உணவகத்திற்குச் சென்று, மகா சங்க உறுப்பினர்களின் 'செத்பிரித்' பராயணங்களுக்கு மத்தியில் சிறப்புப் பதாகையை திரைநீக்கம் செய்து நாடா வெட்டி அதன் திறப்பு விழாவை அடையாளப்படுத்த அழைக்கப்பட்டார். இராணுவத் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் சாஜன்களின் உணவகத்தின் உட்புறத்தை பார்வையிட்டார்.

பின்னர், தேனீர் விருந்துபசாரத்தின் போது அன்றைய பிரதம விருந்தினர், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் சில கருத்துக்களை பரிமாறிக் கொண்டார். அங்கு இராணுவத் தளபதி இலங்கை இராணுவத் தொண்டர் படையணி பயிற்சிப் பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பில் சில கடந்த கால நினைவுகளையும் நினைவு கூர்ந்தார்.

பின்னர், இலங்கை இராணுவத் தொண்டர் படையணி பயிற்சிப் பாடசாலையின் தளபதி அவர்களினால் இராணுவத் தளபதிக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டதுடன், முகாம் வளாகத்திற்குள் மரக்கன்று நட்டு, இலங்கை இராணுவத் தொண்டர் படையணி பயிற்சிப் பாடசாலை விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் சில நினைவுகளை விட்டுச் செல்ல இராணுவத் தளபதி அழைக்கப்பட்டார்.

பொதுபணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்.ஜி.டபிள்யூ.டபிள்யூ. டபிள்யூ.எம்.சி.பி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.