Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th December 2023 16:57:53 Hours

இராணுவ கல்வியற் கல்லூரியின் பட்டதாரிகள் தங்கள் இறுதி ஆய்வினை ஜனாதிபதிக்கு சமர்ப்பிப்பு

இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் கற்கைநெறிகளை பூர்த்தி செய்து சனிக்கிழமை (16) வெளியேறிய பயிளிலவல் அதிகாரிகளின் இறுதி ஆய்வு விளக்கக்காட்சி கடந்த வெள்ளிக்கிழமை (15) மாலை இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் சீன-இலங்கை நட்புறவு கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்விற்கு அதிமேதகு ஜனாதிபதி கௌரவ ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில், பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, சில சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சில உயர் அதிகாரி தாய்நாட்டின் வீரமிக்க பாதுகாவலர்களின் எதிர்கால வாழ்க்கையில் முற்றிலும் புதிய பார்வைகளைத் திறக்கக்கூடிய அவர்களின் புதிய தொழில்முறைக்கு சாட்சியாகவும் மதிப்பீடு செய்ய வருகை தந்திருந்தனர்.

ஆற்றல்மிக்க அதிகாரிகள் பெருமையுடனும் கூட்டாகவும் ‘இலங்கை இராணுவத்தின் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் திறன்களை மேம்படுத்துதல்’ என்ற தொனிப்பொருளின் கீழ் நன்கு தயாரிக்கப்பட்ட ஆய்வுக் கண்டுபிடிப்புகளின் தொகுப்பை பார்வையாளர்களுக்கு கவர்ச்சிகரமான முறையில் வழங்கினர். இது ஒரு ஊடாடும் கேள்வி-பதில் அமர்வைத் தொடர்ந்து ஜனாதிபதி உட்பட பார்வையாளர்கள் கருப்பொருள் தலைப்பின் பல்வேறு அம்சங்களில் அந்த இளம் அதிகாரிகளுக்கு மேலும் தமது கருத்தினை தெரிவித்துடன் வழிகாட்டினர். இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி மரபுகளுக்கு இணங்க அவர்கள் தகுதிபெறுவதற்கு முன், இறுதி ஆராய்ச்சியின் விளக்கக்காட்சி அவர்களின் பயிற்சியின் கட்டாயத் தொகுதியாகும்.

பயிளிலவல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் தேசிய பணிகளில் தங்களை அர்ப்பணிப்பதற்காக மேலதிக அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குமாறு கெளரவ ஜனாதிபதி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

பயிளிலவல் அதிகாரிகளின் விளக்கக்காட்சியின் முடிவில், இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் சஞ்சிகை மற்றும் அதன் மென்பொருள் பதிப்பின் வெளியீடு இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் எம்டிஐ மஹாலேகம் டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியு பீஎஸ்சி அவர்களின் அழைப்பின் பேரில் வெளியிடப்பட்டது. நிகழ்வின் முடிவைக் குறிக்கும் வகையில், சஞ்சிகையின் முதற்பிரதி அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அனைத்து முக்கியஸ்தர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.

பாதுகாப்பு செயலாளரின் பாரியார் திருமதி சித்ராணி குணரத்ன, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே ஆகிய சிரேஷ்ட அதிகாரிகளின் பாரியார்களும் இவ் நிகழ்வில் கலந்துகொண்டனர்.