Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th December 2023 08:09:23 Hours

ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் சேவைக்கு தளபதி பாராட்டு

மத்திய முன்னரங்க பராமரிப்பு பகுதியின் தளபதி மேஜர் ஜெனரல் டிஎம்பீபீ தசநாயக்க அவர்கள் 34 வருடகால பணியின் பின்னர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் இன்று (டிசம்பர் 11) பிற்பகல் குடும்ப உறுப்பினர்களுடன் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை சந்தித்தார்.

சுமூகமான உரையாடல்களின் போது, இராணுவத் தளபதி ஓய்வு பெறும் சிரேஷ்ட அதிகாரியின் சேவைகளைப் பாராட்டியதுடன், போர்க்களத்திலும் போருக்குப் பின்னரான சூழ்நிலையிலும் நினைவுகளை நினைவு கூர்ந்தார். இராணுவத் தளபதி அவரது எதிர்காலத் திட்டங்கள், வாய்ப்புகள் குறித்தும் விசாரணைகளை மேற்கொண்டதுடன் அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்த நிகழ்விற்கு அழைக்கப்பட்ட மேஜர் ஜெனரல் டிஎம்பீபீ தசநாயக்க அவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் சில இன்பங்களைப் பகிர்ந்து கொண்ட இராணுவத் தளபதி, இராணுவத் தளபதி சிரேஷ்ட அதிகாரிக்கு அவரது குடும்ப உறுப்பினர்களால் அவரது வாழ்க்கை முழுவதும் வழங்கப்பட்ட விலைமதிப்பற்ற ஆதரவைப் பாராட்டினார்.

மேஜர் ஜெனரல் டிஎம்பீபீ தசநாயக்க அவர்கள் இராணுவத் தளபதியின் அன்பான அழைப்புக்கு நன்றி தெரிவித்ததுடன், இராணுவத்தில் தனது பல்வேறு கடமைகளை நிறைவேற்றுவதில் தளபதி அவருக்கு வழங்கிய வழிகாட்டுதலுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

சந்திப்பின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு பாராட்டு சின்னமாக விசேட நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கியதுடன் குடும்ப உறுப்பினர்களுக்கு விசேட பரிசுகளையும் வழங்கினார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் பின்வருமாறு;

மேஜர் ஜெனரல் டிஎம்பீபீ தசநாயக்க அவர்கள் 1989 ஜூலை 14 இல் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையணியில் பயிலிளவல் அதிகாரியாக இணைந்துக் கொண்டு தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி மற்றும் இந்திய கல்வியற் கல்லூரியின் பாடநெறி 32 இல் அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றார். அவர் 1991 ஜனவரி 19 அன்று இரண்டாம் லெப்டினன் நிலையில் இலங்கை சமிக்ஞைப் படையணியில் நியமிக்கப்பட்டார். இராணுவத்தில் பணிபுரிந்த காலப்பகுதியில் தொடர்ந்து நிலை உயர்வுகளை பெற்ற அவர், 04 பெப்ரவரி 2023 அவர் மேஜர் ஜெனரலாக நிலை உயர்தப்பட்டார்.

அவர் ஓய்வுபெறும் போது, மத்திய முன்னரங்க பராமரிப்பு பகுதியின் தளபதி பதவியை வகித்து வருகிறார். சமிக்ஞை படையணி பயிற்சி பாடசாலையின் பயிற்சி அதிகாரி, 3 வது சமிக்ஞை படையணி அணி அதிகாரி கட்டளை, 21 வது காலாட் படைப்பிரிவின் சமிக்ஞை அதிகாரி, 3 வது சமிக்ஞை படையணி பிரதி நிறைவேற்று அதிகாரி, 7 வது காலாட் பிரிகேட் மற்றும் 21 வது காலாட் படைப்பிரிவின் சமிக்ஞை அதிகாரி, 6 வது சமிக்ஞை படையணி கட்டளை அதிகாரி இராணுவத் தலைமையக நடவடிக்கைகள் பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரி 2,சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்புப் படைத் தலைமையகம் – வன்னி, 9 வது சமிக்ஞை படையணி கட்டளை அதிகாரி, இராணுவத் தலைமையக தலைமை சமிக்ஞை அதிகாரியின் அலுவலக பொதுப் பணிநிலை அதிகாரி 1 (மின்னணுப் போர்), 8 வது சமிக்ஞை படையணி கட்டளை அதிகாரி, பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அலுவலகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (செயல்பாடுகள்), 23 வது காலாட் படைப்பிரிவின் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (ஒருங்கிணைப்பு), 22 வது காலாட் படைப்பிரிவின் கேணல் பொதுப்பணி, பாதுகாப்பு அமைச்சின் உதவி இராணுவ தொடர்பு அதிகாரி, 572 வது காலாட் பிரிகேட் பதில் தளபதி, இராணுவ தலைமையகத்தில் தர உறுதி மற்றும் ஆய்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் மற்றும் இராணுவ தலைமையகத்தில் தர உறுதி மற்றும் ஆய்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.

தனது இராணுவ வாழ்க்கையில் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாடநெறிகளையும் பின்பற்றியுள்ள அவர் கனிஷ்ட கட்டளை அதிகாரி பாடநெறி, சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகள் பாடநெறி சமிக்ஞை இளம் அதிகாரிகளின் பாடநெறி - இந்தியா, கனிஷ்ட பணிநிலை அதிகாரிகள் பாடநெறி – பாகிஸ்தான், சமிக்ஞை கட்டளை அதிகாரி பாடநெறி- இந்தியா, சிரேஷ்ட கட்டளை பாடநெறி - இந்தியா, மேன்-போர்ட்டபிள் கண்காணிப்பு மற்றும் இலக்கு கையகப்படுத்தல் ரேடார் பாடநெறி – அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகளின் பணியாளர் அதிகாரி கற்கை – ஆஸ்திரேலியா ஆகியவற்றினை பயின்றுள்ளார்.

இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தில் ஆலோசனை டிப்ளோமா பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்தில் நிபுணத்துவ இராஜதந்திரம் மற்றும் உலக விவகாரங்களுக்கான டிப்ளோமா, இந்தியாவின் தேவி அஹில்யா பல்கலைகழக சிரேஷ்ட நிலை பாதுகாப்பு முகாமை டிப்ளோமா, கொழும்பு பல்கலைக்கழகத்தில் சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகள் பயிற்றுவிப்பாளர் பயிற்சி பாடநெறி மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் ஆடை கைத்தொழில் பாடநெறிக்கான ஆடை தொழில்நுட்பம் போன்ற பல இராணுவம் அல்லாத உயர்கல்வி பாடநெறிகளை பின்பற்றியுள்ளார்.