Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th December 2023 18:43:41 Hours

இராணுவப் பொறியியல் படைப்பிரிவில் 'தலைமைத்துவ பயிற்சி'

கொட்டாவ வடக்கு தர்மபால வித்தியாலய பாடசாலை ஆசிரியர்களின் வேண்டுகோளின் பேரில், இலங்கை இராணுவ பொறியியல் படைப்பிரிவு படையினரால் வித்தியாலயத்தின் 78 மாணவ சிப்பாய்களுக்கு தலைமைத்துவ பயிற்சியை செவ்வாய்க்கிழமை (05) மத்தேகொட இலங்கை இராணுவ பொறியியலாளர் படைப்பிரிவு வளாகத்தில் நடாத்தினர்.

'தலைமைத்துவ குணங்கள், குழுப்பணி மற்றும் குழுவை உருவாக்கும் திறன்கள், ஆளுமை மற்றும் சமூக நெறிமுறைகள்' தொடர்பான பொது அறிவை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த செயலமர்வில் விரிவுரைகள், உள்ளக மற்றும் வெளிப்புற நடவடிக்கைகள் மற்றும் தலைமைத்துவ குணங்கள் தொடர்பான செயல்விளக்கம் ஆகியவை இடம்பெற்றன.

பயிற்சியின் முடிவில் ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இலங்கை இராணுவப் பொறியியல் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்எ குலதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்பீ அவர்கள் பயிற்சி நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.