Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th December 2023 20:04:02 Hours

241 வது காலாட் பிரிகேட் தளபதிக்கு 10 வது ஆண்டு விழாவில் மரியாதை

அக்கரைப்பற்று 241 வது காலாட் பிரகேட் படையினர் இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய புதன்கிழமை 2023 நவம்பர் 29 தமது 10 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடினர்.

விழாவிற்கு வருகை தந்த பிரிகேட் தளபதி பிரிகேடியர் எல்.எஸ்.டி.என் பத்திரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களுக்கு 241 வது காலாட் பிரிகேட் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அவர் படையணி வளாகத்தில் நினைவு சின்னமாக மரக்கன்றை நட்டி, படையினருக்கு உரையாற்றியதுடன், அனைத்து நிலையினருடன் குழுப் படமும் எடுத்துக் கொண்டார்.

இந்நிகழ்வின் போது, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கான விடுமுறை விடுதி மற்றும் அண்மையில் நிவர்த்தி செய்யப்பட்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் சார்ஜென்ட்களின் உணவக பிரதான நுழைவாயில் என்பன 241 வது காலாட் பிரிகேட் தளபதியினால் சம்பிரதாயமாக திறந்து வைக்கப்பட்டது. இக்கட்டுமானப் பணியை 24 வது காலாட் படைப்பிரிவின் இராணுவ பொறியியல் சேவைகள் படையணியின் படையினர் மற்றும் 241 வது காலாட் பிரிகேட் படையினரால் மேற் கொள்ளப்பட்டது.