Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th December 2023 20:01:48 Hours

8 வது விஜயபாகு காலாட் படையணியின் 30 வது ஆண்டு நிறைவு

8 வது விஜயபாகு காலாட் படையணி தனது 30 வது ஆண்டு நிறைவு விழாவை ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 03) ஜீவநகர் முகாம் வளாகத்தில் வழக்கமான இராணுவ சம்பிரதாயங்களுடன் கொண்டாடியது.

8 வது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரிக்கு ஆண்டு நிறைவு நாளில் முகாம் வளாகத்தில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர் படையினருக்கு உரையாற்றியதுடன் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டார்.