Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th December 2023 18:06:40 Hours

இராணுவ தளபதி இந்திய தேசிய பாதுகாப்பு பேரவை செயலக ஆலோசகரை சந்திப்பு

இந்தியாவிற்கான நல்லெண்ணப் விஜயத்தை மேற்கொண்டுள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இந்தியாவின் தனது பயணத்திட்டத்தின் ஒரு பகுதியாக திங்கட்கிழமை (டிசம்பர் 04) இந்திய தேசிய பாதுகாப்பு பேரவை செயலக பாதுகாப்பு ஆலோசகரான எயர் மார்ஷல் சந்திப்சிங் (ஓய்வு) பீவீஎஸ்எம் எவீஎஸ்எம் வீஎம்எடிசீ வீசீஎஎஸ் அவர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது இரு தரப்பினரும் தற்போதுள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பு, பிராந்திய பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள், நவீன தொழில்நுட்பங்களுடன் ஆயுதப்படைகளை நவீனமயமாக்குதல் மற்றும் இரு இராணுவ வீரர்களுக்கும் பயிற்சி வாய்ப்புகளை மேலும் மேம்படுத்துதல் தொடர்பாக கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.

சுமுகமான சந்திப்பின் முடிவில், பாராட்டு மற்றும் நல்லெண்ணத்தின் அடையாளமாக நினைவுச் சின்னங்கள் பரிமாற்றிக்கொள்ளப்பட்டன. இலங்கை இராணுவத்தின் இராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூஎம் பெர்னாண்டோ டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ, முழு பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளரும் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியுமான பிரிகேடியர் பிஎம்எ பாலசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இலங்கை இராணுவ தளபதியின் ஐந்து நாள் விஜயத்தில் (டிசம்பர் 3-7) இந்தியப் பாதுகாப்பு அமைச்சினால் 'இந்திய மற்றும் இலங்கை இராணுவங்களுக்கு இடையிலான நீண்டகால உறவுக்கான சாட்சியமாக' அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வீரமரணம் அடைந்த இந்திய போர்வீரர்களுக்கு மரியாதை, புது டில்லியில் உள்ள சவுத் பிளாக் புல்வெளியில் சம்பிரதாய மரியாதை, இந்திய இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே பீவீஎஸ்எம் ஏவீஎஸ்எம் ஏடிசி உடனான பயனுள்ள சந்திப்பு மற்றும் பாதுகாப்பு துறை உயர் அதிகாரிகளுடன் திங்கட்கிழமை (4) கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.