Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th December 2023 19:17:39 Hours

மன்னாரில் 'கட்டின பூஜை' நடாத்துவதற்கு படையினரால் ஆதரவு

2023 நவம்பர் 17 மற்றும் 18, ஆம் திகதிகளில் மாதோட்ட ரஜமஹா விகாரையில் வருடாந்த கட்டின பூஜையினை ஏற்பாடு செய்வதற்கு வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 54 வது காலாட் படைப்பிரிவின் 541 வது காலாட் பிரிகேடின் 10 வது (தொ) கெமுனு ஹேவா படையினர் தமது உதவிகளை வழங்கினர்.

54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.எம்.பீ.எஸ்.பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சீ மற்றும் 541 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் பி.வை.சி பெர்னாண்டோ ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் 10 வது (தொ) கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் டபிள்யூ.ஜி.ஜி.எஸ் பண்டார அவர்ளின் மேற்பார்வையின் கீழ் இத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

கம்பஹா, ஜா-எல, பாதுக்க மற்றும் அநுராதபுரம் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 600 பௌத்த பிக்குகள் வருடாந்த “கட்டின பூஜை” நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின் போது மாத்தோட்ட ரஜ மகா விகாரையின் பிரதமகுருவான வண. அம்பகஹவெவ சங்கரக்கித தேரர் தர்ம பிரசங்கத்தை நடத்தினார்.

இந்த சமய நிகழ்வின் போது 54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 543 வது காலாட் பிரிகேட் தளபதி, அதிகாரிகள் மற்றும் 54 வது காலாட் படைப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இலங்கை கடற்படை மற்றும் விமானப்படையின் படையினர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.