Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd December 2023 22:12:36 Hours

561 வது காலாட் பிரிகேட் படையினரால் தென்னம் பிள்ளைகள் வழங்கல்

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 56 வது காலாட் படைப்பிரிவின் 561 வதுகாலாட் பிரிகேட் படையினர் வன்னிப் பிராந்தியத்தில் தென்னம் பயிர்ச்செய்கைக்கு தமது பங்களிப்பை வழங்கும் வகையில் பரசம்குளம் பகுதியில் நவம்பர் 27-28 ஆம் திகதிகளில் 2500 தென்னம் பிள்ளைகளை வழங்கினர்.

தென்னம் பிள்ளைகளை வழங்கிய இராணுவம் மற்றும் தெங்கு பயிர்ச்செய்கை சபைக்கு நன்றி தெரிவித்து புளியங்குளம் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் தென்னம் பிள்ளைகளை இலவசமாக பெற்றுக்கொண்டனர்.16 வது இலங்கை சிங்கப் படையணி மற்றும் 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையினர் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

வன்னிபாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பீ.ஏ.டி.டபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ,56 வதுகாலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்.ஜி.பீ.எம்காரியவசம் ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஜி மற்றும் 561 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் கே.எம்.ஜி பண்டாரநாயக்க யூஎஸ்பீ பீஎஸ்சீ ஆகியோர் இத்திட்டத்திற்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினர்.

இத் திட்டமானது முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்ட வடக்கின் 2வது 'தெங்கு முக்கோண' வலையம் அமைக்கும் பணிக்கு இணையாக முன்னெடுக்கப்பட்டது. இதற்கு முன்னதாக, வன்னிப் படையினரால் நூற்றுக்கணக்கான தென்னம் பிள்ளைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.