Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd December 2023 21:40:20 Hours

இராணுவ சமிக்ஞை படையணியின் ஓய்வுபெற்ற அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் ஒன்றுகூடல்

தோழமை மற்றும் நல்லெண்ணத்தை நிலைநிறுத்தும் நோக்கத்துடன் இலங்கை சமிக்ஞைப் படையணியின் ஓய்வுபெற்ற அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல் சனிக்கிழமை (25 நவம்பர்) பனாகொட இராணுவ சமிக்ஞை படையணி தலைமையகதில் இராணுவத்தின் பிரதம சமிக்ஞை அதிகாரியும் இலங்கை சமிக்ஞைப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.எஸ். ரத்நாயக்க என்டியூ அவர்களின் கருத்திற்கமைய ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த சந்திப்பின் போது முன்னாள் இலங்கை சமிக்ஞைப் படைவீரர்களின் தலைவர் மேஜர் ஜெனரல் கே.ஆர்.பீ ரோவல் (ஓய்வு) ஆர்டபிள்யூபீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ யூஎஸ்ஏசிஜிஎஸ்சி அவர்களின் பங்கேட்புடன் பல்வேறு நிகழ்வுகள் ஆரம்பமாகின. இலங்கை சமிக்ஞைப் படையணியின் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 238 பேர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இலங்கை சமிக்ஞைப் படையினரால் வழங்கப்பட்ட வண்ணமயமான இசைநிகழ்ச்சி மற்றும் அணிநடை கண்காட்சியுடன் அன்றைய நிகழ்வுகள் ஆரம்பமாகின. அண்மையில் இலங்கை சமிக்ஞைப் படையணியின் முன்னேற்றம் மற்றும் மேம்பாடுகளை எடுத்துக்காட்டும் ஒரு வீடியோ ஆவணப்படம் திரையிடப்பட்டது. அதே சந்தர்ப்பத்தில், 3வது சமிக்ஞை படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரி II கேஐஎஸ் கீர்த்திரத்ன அவர்கள் வடக்கின் பருத்தித்துறை முனையில் இருந்து தேவேந்திரமுணை வரையில் கால் நடையாகசென்று கின்னஸ் உலக சாதனை படைத்தமைக்கு சமிக்ஞை படைவீரர் சங்கத்தினரால் ரூபா 100,000.00, பணப்பரிசு வழங்கப்பட்டது.

பின்னர்,3வது சமிக்ஞை படையணியின் லெப்டினன் கேணல் டிவீ பிரோகியர் ஞாபகார்த கல்வி ஊக்கமளித்தல் நிலையத்தை பார்வையிட்டனர்.

நிகழ்வின் இறுதியில் வீரர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்குள் விளையாட்டு மைதானத்தில் வேடிக்கையான விளையாட்டுகளில் கலந்து கொண்டனர். இறுதியாக,கேட்போர் கூடத்தில் மதிய உணவு பரிமாறப்பட்டதுடன், இசையுடன் நிறைவுற்றது.பல சமிக்ஞை படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.