Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd December 2023 10:46:03 Hours

நூற்றுக்கணக்கான தென்னம் பிள்ளைகளை நடும் பணியில் வன்னிப் படையினர்

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 56 வது காலாட் படைப்பிரிவின் 562 வது காலாட் பிரிகேடின் 12 வது (தொ) விஜயபாகு காலாட் படையினர் நாட்டின் இரண்டாவது "தெங்கு முக்கோணத்திற்கு" ஊக்கமளிக்கும் வகையில், 23 நவம்பர் 2023 அன்று மறவன்குளம் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு மேலும் 975 தென்னம் பிள்ளைகளை வழங்கினர்.

மேலும், 563 காலாட் பிரிகேடின் 7 வது இலங்கை சிங்க படையணியின் படையினர் 2023 நவம்பர் 25-27 ஆம் திகதி வரை கொகேயா, ரம்பாவிட்தீ, நொச்சிமேட்டை, பர்னாட்டுகல்லு, வெலசியகுளம் மற்றும் அரசமுறிப்பு ஆகிய பகுதிகளில் 750 தென்னம் பிள்ளைகளை விநியோகித்த்துடன், 562 காலாட் பிரிகேட் படையினர் தேசத்தை கட்டியெழுப்பும் பணிகளின் ஒரு பகுதியாக 2023 நவம்பர் 22 முதல் 23 வரை பெரியகாடு பகுதியில் 1000 மரக்கன்றுகளை விநியோகித்தனர்.

இந்த முயற்சியானது பிராந்தியத்தில் தென்னை பயிர்ச்செய்கைக்கு புத்துயிர் அளிக்கவும், நாட்டின் இரண்டாவது 'தெங்கு முக்கோணத்தை' வட பிராந்தியத்தில் நிறுவுவதன் மூலம் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான தேசிய திட்டத்தின் ஒரு பகுதியாகும். வடக்கில் தென்னை முக்கோணத்தின் முதல் கட்டம் முன்னதாக முல்லைத்தீவில் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், வடக்கில் இரண்டாவது கட்டமாக வன்னி பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ளது.