Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd December 2023 11:43:03 Hours

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியில் தளபதியின் விரிவுரை

சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி ஆனது முப்படைகளின் அதிகாரிகளுக்கான இராணுவக் கல்விக்கான மிக உயர்ந்த இடமாகும், மேலும் இது முப்படைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் அதிகாரிகளின் தொழில்முறை அறிவு மற்றும் கற்றலை வளர்க்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்டது. பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி பாடநெறி இல-17 இற்கான இராணுவத் தளபதியின் விரிவுரையினை வெள்ளிக்கிழமை (01) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் ஆற்றினார்.

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் பிகேஜிஎம்எல் ரோட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜி அவர்களின் வரவேற்புக்குப் பிறகு பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி கேட்போர் கூடத்தில் அன்றைய சிறப்பு பேச்சாளரை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார், அங்கு 25 வெளிநாட்டு அதிகாரிகள் உட்பட 148 இளங்கலை பட்டதாரிகள் இராணுவத் தளபதியின் வருகைக்காக காத்திருந்தனர்.

இராணுவத் தளபதியின் உரையானது, ‘தேசிய பாதுகாப்பு மற்றும் புதிய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இலங்கை இராணுவத்தின் அக்கறைகள் மற்றும் மாற்றம் தொடர்பான பாரம்பரியமற்ற அச்சுறுத்தல்கள் மற்றும் மரபுசார்ந்த பிரச்சினைகளின் விரிவான கண்ணோட்டத்தை மையமாகக் கொண்டிருந்தது.

உரையின் முடிவில், கேள்வி பதில் அமர்வின் போது கேள்விகள் மற்றும் விளக்கங்கள் மூலம் விருந்தினர் பேச்சாளருடன் உரையாடும் வாய்ப்பு பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் மாணவ அதிகாரிகளுக்கு கிடைத்தது. ஏற்பாட்டின் முடிவில், அனைத்து இளங்கலை பட்டதாரிகளின் சார்பாக பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் தளபதி மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆகியோருக்கிடையில் நினைவுச்சின்னம் பரிமாறிக்கொள்ளப்பட்டது.

அதன்பின், பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் தளபதி வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்ட தளபதி விடுதியை இராணுவ தளபதி திறந்து வைத்தார்.

அடுத்து, தேநீர் விருந்தின் போது பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் மாணவ அதிகாரிகள் மற்றும் பணிப்பாளர்களுடன் இராணுவத் தளபதி நெருக்கமான உரையாடலை மேற்கொண்டார்.

இராணுவத் தளபதி புறப்படுவதற்கு முன், தனது எண்ணங்களையும் பாராட்டுக் குறிப்புகளையும் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் அதிதிகள் பதிவேட்டில் பதிவிட்டார்.

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியில் பாடநெறி இல -17 இன் பங்களாதேஷ், இந்தியா, இந்தோனேசியா, மாலைத்தீவு, நேபாளம், , பாகிஸ்தான், ருவாண்டா, சவுதி அரேபியா, செனகல் மற்றும் ஐக்கிய அமெரிக்கா, ஷாம்பியா உட்பட 25 வெளிநாட்டவர்களுடன் , 148 இளங்கலை பட்டதாரிகள் இப்பாட நெறியியை பின்பற்றுகின்றனர். 72 இராணுவம், 26 கடற்படை மற்றும் 24 விமானப்படை அதிகாரிகள் இந்தப் பாடநெறியில் 'தேர்ச்சியாளர் பதவிதாரிகள் கல்லூரி' (பீஎஸ்சி) பட்டப்படிப்பைப் பெறுகின்றனர்,