Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd December 2023 10:25:14 Hours

ஓய்வுபெறும் பிரதி பதவி நிலை பிரதானிக்கு இராணுவத் தளபதியின் பாராட்டு

ஓய்வு பெறும் இலங்கை சிங்க படையணியின் சிரேஷ்ட அதிகாரியும் இலங்கை சிங்க படையணியின் படைத் தளபதியும் பதில் பதவி நிலை பிரதானியும் பிரதி பதவி நிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் ஜீ.ஆர்.ஆர்.பீ ஜயவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் ஓய்வு பெற்றுசெல்லும் முன் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 01) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை சந்தித்து வாழ்த்துக்களைத் பெற்றுக்கொண்டார்.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலான சேவையின் பின்னர், ஓய்வுபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களால் அவரது அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.

இந்த சந்திப்பின் போது இராணுவத்தில் இலங்கை சிங்க படையணியின் உறுப்பினராக இராணுவத்திற்கு.34 வருடங்களுக்கும் மேலாக முன்மாதிரியான சேவையினை வழங்கிய மேஜர் ஜெனரல் ஜீ.ஆர்.ஆர்.பீ ஜயவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இராணுவத் தளபதியிடமிருந்து பாராட்டுக்களையும், வாழ்துக்களையும் பெற்றுக்கொண்டார். மே 2009 க்கு முன்னர் மிக உயர்ந்த திறன் கொண்ட காலாட் படை அதிகாரியாக பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் முடிவில் போது ஓய்வு பெற்றவரின் பங்களிப்பு மற்றும் மதிப்புமிக்க கடமைகளை இராணுவத் தளபதி நினைவுகூர்ந்தார்.

ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் சில இன்பங்களைப் பகிர்ந்துகொண்ட இராணுவத் தளபதி, ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் எதிர்கால முயற்சிகள் குறித்தும் கேட்டறிந்ததோடு அவருக்கு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார். கடமை தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியில் இருக்க வேண்டியிருந்த வேளையில் அவரது குடும்ப உறுப்பினர்கள் அவருக்கு வழங்கிய ஆதரவையும் அவர் பாராட்டினார்.

மேஜர் ஜெனரல் ஜீ.ஆர்.ஆர்.பீ ஜயவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களும் இராணுவத் தளபதியின் அன்பான வாழ்த்துக்களுக்கும் வழிகாட்டுதலுக்கும் நன்றி தெரிவித்தார்.

சந்திப்பின் முடிவில், லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள், அலுவலகத்தில் இருந்த குடும்ப உறுப்பினர்களுக்கு சிறப்புப் பரிசில்கள் வழங்கியதுடன், சிரேஷ்ட அதிகாரிக்கு சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கினார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான வரலாறு பின்வருமாறு

மேஜர் ஜெனரல் ஜீ.ஆர்.ஆர்.பீ ஜயவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 1988 பெப்ரவரி 22 ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் பயிலிளவல் அதிகாரி பாடநெறி 29 இல் இணைந்தார். தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற்கல்லூரியில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர், அவர் இரண்டாம் லெப்டினன் நிலையில் 1989 டிசம்பர் 16 இலங்கை சிங்க படையணியில் நியமிக்கப்பட்டார். இராணுவத்தில் பணிபுரிந்த காலப்பகுதியில் அடுத்தடுத்த நிலைகளுக்கு படிப்படியாக உயர்த்தப்பட்டஅவர் 04 பிப்ரவரி 2021 அன்று மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.

இவர் இராணுவத்தின் பிரதிப் பதவிநிலைப் பிரதானியும், இலங்கை சிங்க படையணியின் படைத்தளபதியாகவும் பதில் பதவிநிலைப் பிரதானியாகவும் பதவி வகிக்கின்றார். மேலும் அவர் குழு கட்டளையாளர், படையலகு புலனாய்வு அதிகாரி, நிறைவேற்று அதிகாரி, 4 வது சிங்க படையணியின் அணி- கட்டளையாளர் மற்றும் 2 ஆம் கட்டளை அதிகாரி, இராணுவ தலைமையக நலன்புரி பணிப்பகத்தின் பணி நிலை அதிகாரி – 2, 553 வது பிரிகேடின் பிரிகேட் மேஜர், இலங்கை சமாதான ஆதரவு செயற்பாடுகள் பயிற்சி நிறுவனத்தின் பயிற்றுவிப்பாளர், கொழும்பு செயற்பாடுகள் கட்டளையின் பொதுப் பணிநிலை அதிகாரி – 2, 6 வது சிங்க படையணியின் 2 ஆம் கட்டளை அதிகாரி, இராணுவத் தளபதியின் பாதுகாப்பு ஒருங்கிணைப்புப் பிரிவின் தளபதி, 8 வது சிங்க படையணியின் கட்டளை அதிகாரி, கொழும்பு செயற்பாடுகள் கட்டளையின் குழுத் தளபதி, கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் பணி நிலை அதிகாரி - 1 (நிர்வாகம்), நகர அபிவிருத்தி அதிகார சபையின் வீடமைப்பு திட்ட அதிகாரி, லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் இலங்கை பாதுகாப்பு படையின் குழுத்தளபதி, பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் கேணல் பொதுப்பணி, 542 வது மற்றும் 661 வது காலாட் பிரிகேட் தளபதி, 'நெலும்பொகுண' திரையரங்கின் பிரதம நிறைவேற்று அதிகாரி, இராணுவ தலைமையக சொத்து முகாமைத்துவ பணிப்பகத்தின் பணிப்பாளர், காலாட் படை பயிற்சி நிலைய தளபதி, 57 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி, இலங்கை சிங்க படையணியின் படைத் தளபதி மற்றும் இராணுவத்தின் உபகரண பணிப்பாளர் நாயகம் போன்ற பதவிகளை வகித்துள்ளார்.

போர்க்களங்களில் அவரது வீரம் மற்றும் துணிச்சலான நடத்தைக்காக 'ரண விக்கிரமபதக்கம்' மற்றும் 'ரண சூரபதக்கம்' ஆகிய விருதுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளார்.

அவர் தனது இராணுவ வாழ்க்கையில் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாடநெறிகளை பின்பற்றியுள்ளார். அவையாவன இளம் அதிகாரிகளின் பாடநெறி, படையலகு புலனாய்வு அதிகாரிகளின் பாடநெறி, அடிப்படை கணினிப் பாடநெறி, அதிகாரிகளின் இடைநிலை தொழிலாண்மை நிர்வாகப் பாடநெறி, உளவியல் செயற்பாட்டு பாடநெறி, அதிகாரிகளின் வழங்கல் மற்றும் நிர்வாக பாடநெறி, மேற்பார்வையாளர் மற்றும் பணிநிலை அதிகாரிகள் பாடநெறி, ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பயிற்றுவிப்பாளர் பாடநெறி, இராணுவ கட்டளை மற்றும் பணிநிலை பாடநெறி, காலாட்படை இளம் அதிகாரிகளின் பாடநெறி - பாகிஸ்தான், மோட்டார் (அதிகாரிகள்) பாடநெறி - இந்தியா, இடைநிலை தொழிலாண்மை பாடநெறி – பாகிஸ்தான், சிறு ஆயுதப் பயிற்சி பாடநெறி - தாய்லாந்து, , சர்வதேச மனிதாபிமான சட்டப் பாடத்தில் பணிப்பாளர் மற்றும் பயிற்சியாளர்கள் பாடநெறி – இத்தாலி தேசிய பாதுகாப்பு மற்றும் போர் பாடநெறி - பாகிஸ்தான் மற்றும் இராணுவ படையலகு கட்டளை பாடநெறி - சீனா.

பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்தில் இராஜதந்திரம் மற்றும் சர்வதேச உறவுகள் டிப்ளோமா, சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க நிலையத்தில் போர் தீர்வு திறன் அபிவிருத்தி டிப்ளோமா, கொழும்பு பல்கலைக்கழகத்தில் மனித வள மேம்பாட்டு நிறுவனத்தில் மனித வள முகாமைத்துவ டிப்ளமோ, கொழும்பு பல்கலைக்கழகத்தில் மனித வள முகாமைத்துவ முதுகலைப் பட்டம், ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகளில் முதுகலை அறிவியல் மற்றும் தேசிய பாதுகாப்பு அறிவியல் முதுகலை மற்றும் பாகிஸ்தானில் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் போர் பயிற்சி ஆகிய இராணுவம் அல்லாத பாடநெறிகளையும் சிரேஷ்ட அதிகாரி பின்பற்றியுள்ளார்.