Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th November 2023 05:44:20 Hours

இராணுவ கல்வியற் கல்லூரி ஆய்வாளர்களுக்கு மேற்கு தளபதியின் ஆலோசனைகள்

தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் பாடநெறி 92,92பி மற்றும் எஸ்சீ 20 என்பவற்றின் பயிளிலவல் சிரேஷ்ட அதிகாரிகள் குழு அதிகாரவானையினை பெறுவதற்கு முன்னர் அவர்களின் இறுதி விளக்கக்காட்சிக்கான ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை மேலும் வளப்படுத்தும் முயற்சியில் செவ்வாய்க்கிழமை (2023 நவம்பர் 21) பனாகொட மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்களுடன் பனாகொட மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தில் நேர்காணலை மேற்கொண்டனர்.

இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் பயிளிலவல் அதிகாரிகள் 2023 டிசம்பர் பணியமர்த்துவதற்கு முன்னர் அவர்களின் இறுதி விளக்கக்காட்சியின் ஆய்வுப் பணியின் ஒரு பகுதியாக, இராணுவத் தளபதியின் கருத்து பெறுவதற்காக, 'இலங்கை இராணுவத்தின் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் திறன்களை மேம்படுத்தல்' என்ற கருப்பொருளில் வழக்கமான முன்வைப்புடன் முதல்-நிலைத் தரவு மற்றும் சரியான தகவல்களைச் சேகரிப்பதன் நோக்கமாக இந் நேர்காணல் இடம்பெற்றது.

மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி, கூறப்பட்ட தலைப்பு மற்றும் ஆராய்ச்சிக்கான புதிய நோக்கங்கள் தொடர்பான ஆழமான நுண்ணறிவுகள், உள்ளீடுகள் மற்றும் பரந்த கண்ணோட்டங்களை ஆராய்ச்சிக் குழுவிற்கு வழங்கினர். அவர் அவர்களின் கல்வி முயற்சிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், அவர்களின் தொழில் வாய்ப்புக்களுக்கான இத்தகைய விளக்கக்காட்சிகளின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டினார்.

பிரிகேடியர் பொதுப்பணி பிரிகேடியர் கேடிபீ டி சில்வா ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி, பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் விடுதி பிரிகேடியர் ஏஎம்ஆர் அபேசிங்ஹ சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர் மற்றும் பாடநெறி அதிகாரிகளில் ஒருவர் பயிளிலவல் அதிகாரிகளின் கல்விப் பணிகளுக்கு உதவியாக இருந்தனர்.