Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st November 2023 17:17:41 Hours

இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி பயிளிலவல் அதிகாரிகள் பாடநெறி நிறைவிற்கு முன் தளபதியை சந்திப்பு

தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் பாடநெறி 92,92பி மற்றும் எஸ்சீ 20 என்பவற்றின் பயிளிலவல் அதிகாரிகள் குழு (செனகல் நாட்டின் அதிகாரி உட்பட) மரியாதை நிமித்தம் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை திங்கட்கிழமை (20) இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தது.

இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் பயிளிலவல் அதிகாரிகள் பணியமர்த்துவதற்கு முன்னர் அவர்களின் இறுதி விளக்கக்காட்சியின் ஆய்வுப் பணியின் ஒரு பகுதியாக, இராணுவத் தளபதியின் கருத்து பெறுவதற்காக, 'இலங்கை இராணுவத்தின் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் திறன்களை மேம்படுத்தல்' என்ற கருப்பொருளில் வழக்கமான முன்வைப்புடன் இராணுவத் தளபதியை நேர்காணல் செய்தனர்.

நேர்காணலின் போது, இராணுவத் தளபதி ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை அமைதி காக்கும் படையினரின் தற்போதைய பங்கு குறித்து கருத்துத் தெரிவித்ததுடன், இலங்கை இராணுவத்தின் ஐ.நா திறன்களை மேலும் மேம்படுத்தும் வகையில், தொகுதிகளுக்குள் செல்ல வேண்டிய மேம்பாடுகள் தொடர்பான வழங்கல் விடயங்களை விளக்கினார்.

தியத்தலாவையில் நடைபெறவிருக்கும் விடுகை அணிவகுப்பில் விரைவில் தங்கள் அதிகாரவாணைகளை பெற எதிர்பார்க்கும் அந்த பயிளிலவல் அதிகாரிகள், இராணுவத் தளபதியின் வேலை பழுவான கால அட்டவணையை மீறி இராணுவத் தலைமையகத்தில் தங்கள் தொடர்புகளை எளிதாக்கியதற்காக இராணுவத் தளபதிக்கு நன்றி தெரிவித்தனர்.

சிநேகபூர்வ உரையாடல்களின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் பயிளிலவல் அதிகாரிகளுக்கு சிறப்பு நினைவுச் சின்னங்களை வழங்கியதோடு பாடநெறிக்கு முன் ஒரு அறிவொளியான ஆராய்ச்சிப் பணி மற்றும் இறுதி விளக்கக்காட்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தளபதியின் செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் எம்டிஐ மாஹாலேகம் டப்ளியுடப்ளியுவீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியு பீஎஸ்சி, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் பிரதம பயிற்றுவிப்பாளர் கேணல் எல்.பீ அத்துகோரள ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர் மேஜர் என்எஸ்பீ டி சில்வா டப்ளியுடப்ளியுவீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் மற்றும் சில பாடநெறி அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.