Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th November 2023 05:32:34 Hours

முல்லேரியாவில் டெங்கு ஒழிப்பு திட்டம்

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 14 வது காலாட் படைப்பிரிவின் 144 வது காலாட் பிரிகேட் படையினர் 2023 நவம்பர் 11 கொதட்டுவ, கொடிகாவத்தை மற்றும் முல்லேரியா சுகாதார வைத்திய அதிகாரி பகுதிகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுத்தனர்.

2 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் பதினைந்து பேர்கொண்ட படையினர் கொதட்டுவ பகுதியை சேர்ந்த 10 பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் இணைந்து இத்திட்டத்தை மேற்கொண்டனர். இத் திட்டத்தின் மூலம் சுமார் 150 வீடுகள் ஆய்வு செய்யப்பட்டு, டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை ஒழிப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி, 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 144 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகியோர் நிகழ்வின் வெற்றிக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினர்.