Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th October 2023 13:24:35 Hours

'ஒற்றுமையே பலம்' என்ற குறிக்கோளுடன் கஜபா படையணியின் 40 வது ஆண்டு நிறைவு கொண்டாட்டம்

வீரமும் துணிச்சல் மிக்க காலாட்படை படையணியான இலங்கை இராணுவத்தின் கஜபா படையணியின் ஆண்டு நிறைவு விழா ஒக்டோபர் 14ஆம் திகதிகொண்டாடுவதுடன், அந்த படையணி பெருமைமிக்க 40வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொண்டாட்ட நிகழ்வு இன்று (14) படையணி தலைமையக வளாகத்தில் இடம்பெற்றது.

1983ஆம் ஆண்டு காலஞ்சென்ற மேஜர் ஜெனரல் விஜய விமலரத்னவினால் ஸ்தாபிக்கப்பட்ட படையணியின் 40 வது ஆண்டு நிறைவு விழா சாலியபுர பிரதேசத்திலுள்ள கஜபா படையணி தலைமையகத்தில் இடம்பெற்றதுடன் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கடமையாற்றும் கஜபா படையணி உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவத் தளபதியும் கஜபா படையணி படைத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ கலந்து கொண்டார்.

ஆண்டு நிறைவுதினத்தில் (14) பிரதம அதிதியான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுக்கு கஜபா படையணி தலைமையக நுழைவாயிலில் இராணுவ மரபுகளுக்கு அமைய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியதை வழங்கப்பட்டதுடன் பிரதி நிலைய தளபதி கேணல் கேஆர்கே களுபாஹன ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்கள் அன்புடன் வரவேற்றார். கஜபா படையணி நினைவுதூபியில் ஸ்தாபகத் தந்தை மறைந்த மேஜர் ஜெனரல் விஜய விமலரத்னவின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, ஆண்டுவிழா அணிவகுப்பில் அன்றைய பிரதம அதிதி மரியாதையை ஏற்றுக்கொள்வதற்காக நிலைய தளபதி பிரிகேடியர் எச்.டி.டபிள்யூ வித்யானந்த ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்கள் சிறப்பு மேடைக்கு அழைத்து சென்றார்.அணிவகுப்புத் தளபதியுடன் இணைந்து, 19 அதிகாரிகள் மற்றும் அனைத்து கஜபா படையலகுகளின் 427 சிப்பாய்கள் கொண்ட நேர்த்தியான உடையணிந்த அணிவகுப்பை தளபதி மதிப்பாய்வு செய்தார். மேலும் பெருமையுடன் அணிவகுத்த ஜனாதிபதி மற்றும் படையணி வர்ணங்களுக்கு சிறப்பு மேடையில் இருந்து மரியாதை செலுத்தினார்.

இராணுவ தளபதியும் கஜபா படையணி படைத்தளபதியுமான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் படையினருக்கு உரையாற்றுகையில் மனிதாபிமான நடவடிக்கையில் கஜபா படையணி உறுப்பினர்களின் பங்களிப்பையும் அந்த படைவீரர்கள் தாய்நாட்டிற்காக ஆற்றிய தியாகத்தையும் கஜபா படையணியின் 40 ஆண்டுகால பயணத்தையும் நினைவு கூர்ந்தார். மேலும் படையணியின் மறைந்த வீர வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதோடு சிகிச்சை பெற்று வரும் இராணுவ வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.

அணிவகுப்பில் மரியாதைக்கு பின்னர், இராணுவத் தளபதி முகாம் வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டு அந்நாளுக்கான நினைவுளை சேர்த்தார். குழு படங்களில் பங்கேற்ற பிறகு, நிகழ்வின் முடிவைக் குறிக்கும் வகையில் அனைத்து நிலையினருடான மதிய உணவும் நடைபெற்றது. அதன்போது, படையணி வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள 6 மாடிகளைக் கொண்ட கஜபா படையணி தலைமையக விடுமுறைவிடுதியான 'கிங் கெட்டேரியன் தி லெகசி சூட்' என்ற பெயரில் தளபதியினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த விடுமுறைவிடுதியில் 6 ஆடம்பர அறைகள் மற்றும் நீச்சல் குளம் உள்ளிட்ட நவீன வசதிகள் உள்ளன.

கஜபா படையணி பேரவை உறுப்பினர்கள், முன்னாள் படைவீரர்கள், சிரேஷ்ட கஜபா படையணி அதிகாரிகள், காயமடைந்த போர்வீரர்கள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

1983 ஒக்டோபர் 14 ஆம் திகதி காலஞ்சென்ற மேஜர் ஜெனரல் விஜய விமலரத்னவினால் 1 ரஜரட்ட ரைபிள் படையணியையும் 1 வது விஜயபாகு காலாட்படை படையணியையும் இணைத்து கஜபா படையணி நிறுவப்பட்டது. இலங்கை இராணுவத்திற்கு புதிய படையணி தேவையில் பிரிவினைவாத பயங்கரவாதத்தை அச்சமின்றி எதிர்கொள்ளக்கூடிய துணிச்சலான காலாட் படை வீரர்களை உருவாக்கி, பொதுமக்களையும் இராணுவத்தையும் குறிவைத்து பயங்கரவாதிகளின் வன்முறை மற்றும் கொடூரமான தாக்குதல்களை ஒழித்து தாய்நாட்டை ஒருங்கிணைக்க கஜபா படையணி தலைமையகம் பெரும் முயற்சியை மேற்கொண்டது.

கஜபா படையணியின் முதல் தளபதி லெப்டினன் கேணல் விஜய விமலரத்ன, யானையின் பலத்தையும் தனித்துவமான இராணுவத் திறமையையும் பிரதிபலிக்கும் வகையில் 'ஒற்றுமையே பலம்' எனும் தொனிப்பொருளின் மூலம் கஜபா மன்னருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கஜபா என்ற பெயரில் இந்தப் படையணியை நிறுவினார்.