Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th October 2023 20:36:23 Hours

கஜபா படையணியின் 40வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சாலியபுரவில் இரவு முழுவதும் 'பிரித்' பாராயணம்

கஜபா படையணியின் 40 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு (ஒக்டோபர் 14) இரவு முழுவதும் 'பிரித்' பாராயணம் மற்றும் தானம் வழங்கும் நிகழ்வுகள் அனுராதபுரம் சாலியபுரத்தில் உள்ள கஜபா படையணி தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜனகி லியனகே, மறைந்த மற்றும் காயமடைந்த கஜபா படையணி வீர்ரகளின் குடும்ப உறுப்பினர்கள், படைவீரர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பிரதிநிதிகள் ஒன்றுகூடலில் ஒக்டோபர் 12-13 திகதிகளில் நடைப்பெற்றது.

பாரம்பரிய நடனக் கலைஞர்களின் வண்ணமயமான ஊர்வலம், புனித பொருட்களின் பெட்டகம் (கரண்டுவ) மற்றும் பழைய நூல்கள் (பிரிவனபொத்த) என்பவற்றுடன் எண்கோண மண்டபத்திற்கு (பிரித்மண்டபய) மகா சங்கத்தின் வணக்கத்துக்குரிய உறுப்பினர்களை அழைத்துச் சென்றதுடன் சிரேஷ்ட பௌத்த துறவியால் கஜபா படைத்தளபதியாகவும் தேசத்தின் வரலாற்றில் இந்த இக்கட்டான காலகட்டத்தில் இராணுவத் தளபதியாகவும் ஆற்றிய முக்கிய பங்கை பெரிதும் பாராட்டி வழக்கமான சொற்பொழிவு (அனுஷாசனம்) வியாழன் இரவு (ஒக்டோபர் 12) வழங்கப்பட்டது.

மகா சங்கத்தின் வண. உறுப்பினர்கள், மறைந்த மற்றும் காயமடைந்த அனைத்து போர்வீரர்களுக்கும் மற்றும் படையணிக்கும் அதன் எதிர்கால வாய்ப்புகளுக்காக ஆசீர்வாதங்களைத் தெரிவித்தனர். இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி, பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதிகள், படைப்பிரிவு தளபதிகள், பிரிகேட் தளபதிகள், கஜபா படையணி நிலைய தளபதி அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் 'பிரித்' ஓதுதல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மறுநாள் காலை (13 ஒக்டோபர்) 20க்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகள், இரவு பிரித் பாராயணத்தில் கலந்து கொண்டவர்கள் தானம் வழங்கும் இடத்திற்கு வருகை தந்தனர்.

இராணுவ தளபதியும் கஜபா படையணி படைத்தளபதியுமான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் 'புத்த பூஜை' செய்த பின்னர், திருமதி ஜானகி லியனகே மற்றும் பலருடன் மகா சங்க உறுப்பினர்களுக்கு அன்னதானம் வழங்கினார். சமய சடங்குகள் மற்றும் சடங்குகள் தொடங்குவதற்கு முன்பு அவர் அந்த இடத்தில் வைக்கப்படும் புனித கலசத்தையும் எடுத்து வந்தார். கஜபா படையணி தொடங்கப்பட்ட முதல் 2009 மே மாதம் மனிதாபிமான நடவடிக்கைகளின் உச்சம் வரை பிரிவினைவாத பயங்கரவாதத்திற்கு எதிராக நடத்தப்பட்ட அனைத்து முக்கிய இராணுவ நடவடிக்கைகளிலும் தீவிரமாக பங்களித்துள்ளது.

171 வீரமிக்க அதிகாரிகளும், 4068 துணிச்சலான சிப்பாய்களும் நம் அனைவருக்கும் ஒரு சிறந்த நாளை உருவாக்குவதற்காக உயர்ந்த தியாகத்தை செய்த அதே வேளையில் 307 அதிகாரிகள் மற்றும் 5646 சிப்பாய்களும் நிரந்தர காயங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

2009 ஆம் ஆண்டு முதல், படையணியின் அனைத்து படையலகுகளும் பல்வேறு இராணுவ நடவடிக்கைகள் மற்றும் தேசத்தை கட்டியெழுப்பும் பணிகளை தங்களின் உள்ளார்ந்த துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு வருகின்றன.