Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th October 2023 18:37:25 Hours

‘ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்’ இராணுவ வெற்றியாளர்களுக்கு நிலை உயர்வு வழங்கி கௌரவிப்பு

சீனாவின் ஹாங்சோவில் அண்மையில் நடைபெற்ற ’19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்’ இராணுவ சாதனையாளர்கள் அணிவகுத்து தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, இன்று (10 ஒக்டோபர்) காலை இராணுவத் தலைமையகத்தைச் சுற்றிலும் வாழ்த்துக்களும்கெளரவிப்பும் வழங்கப்பட்டதுடன் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்களினால் பாராட்டு மற்றும் நிலை உயர்வுகள் வழங்கப்பட்டன.

ஈட்டி எறிதல், 400 மீ x 4 அஞ்சல் ஓட்டம் (ஆண்கள் மற்றும் பெண்கள்) மற்றும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் உள்ளடங்களாக 12 பேர் கொண்ட அணியில் 6 இராணுவ வீராங்கனைகள் மற்றும் 4 இராணுவ வீரர்கள் பதக்கங்களை வென்றுள்ளனர்.

இராணுவத் தளபதியின் பரிந்துரையின் பேரில் அந்த வெற்றியாளர்கள் இராணுவத் தலைமையகத்திற்கு அழைக்கப்படுவதற்கு முன்னர் அவர்களது அடுத்த நிலைகளுக்கு நிலை உயர்வு பெற்றனர்.

லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, அந்த சாதனையாளர்களுடனான கலந்துரையாடல்களின் போது, அவர்களின் சாதனைகள் மற்றும் இந்த சர்வதேச நிகழ்வில் உற்சாகமூட்டும் நிகழ்ச்சிகளைப் பற்றிப் பேசியதுடன், அவர்களின் தடகளத் திறமைகளை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான உதவிகளை அவர்களுக்கு வழங்குவதாக மேலும் உறுதியளித்தார்.

அதிகாரவாணையற்ற அதிகாரி II எச்கேகே குமாரகே இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி, பணிநிலை சார்ஜன் எஸ்ஏ தர்ஷன இலங்கை பீரங்கி படையணி, பணிநிலை சார்ஜன் எச்எல்என்டி லேகம்கே இராணுவ மகளிர் படையணி, பணிநிலை சார்ஜன் நதீஷா ராமநாயக்க இராணுவ மகளிர் படையணி, சார்ஜன் ஆர்எம்ஆர்என் ராஜகருணா இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி, பெம்பெடியர் ஜிடிகேகே நிகு இலங்கை பீரங்கி படையணி, லான்ஸ் பெம்படியர் பீஎம்பீஎல் கொடிகார இலங்கை பீரங்கி படையணி மற்றும் சிப்பாய் ஏவீடி தினுக தேஷான் இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி ஆகிய இராணுவ தடகள வீர வீராங்கனைகள் பங்குபற்றியதுடன் இலங்கை பெண்கள் கிரிகெட் அணி வீரர்களான இலங்கை இராணுவ மகளிர் படையணியின் சார்ஜன் டி.எம்.எஸ்.எம் குமாரி,இலங்கை இராணுவ மகளிர் படையணியின் சார்ஜன் என்.என்.டி சில்வா, இலங்கை இராணுவ மகளிர் படையணியின் சார்ஜன் டப்ளியுஏகே குலசூரிய, இலங்கை இராணுவ மகளிர் படையணியின் லான்ஸ் கோப்ரல் எம்ஏஏ சஞ்சீவனி ஆகியோர் பங்குபற்றினர்.

இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற பாராட்டு விழாவிற்கு விளையாட்டு பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் பீஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் பங்குபற்றினார்.

இராணுவ பங்கேற்பாளர்களின் சாதனைகள் பின்வருமாறு:

ஆண்களுக்கான 400மீ x 4 அஞ்சல் ஓட்டம் - வெண்கலப் பதக்கம்

அதிகாரவாணையற்ற அதிகாரி II எச்கேகே குமாரகே இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி
பணிநிலை சார்ஜன் எஸ்ஏ தர்ஷன இலங்கை பீரங்கி படையணி,
சார்ஜன் ஆர்எம்ஆர்என் ராஜகருணா இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி
பெம்படியர் ஜிடிகேகே நிகு இலங்கை பீரங்கி படையணி

ஈட்டி எறிதல் (பெண்கள்) –வெள்ளி பதக்கம்

பணிநிலை சார்ஜன் எச்எல்என்டி லேகம்கே இராணுவ மகளிர் படையணி

பெண்களுக்கான 400மீ x 4 அஞ்சல் ஓட்டம் - வெண்கலப் பதக்கம்

பணிநிலை சார்ஜன் நதீஷா ராமநாயக்க இராணுவ மகளிர் படையணி

கிரிகெட் –பெண்கள் பிரிவு-வெள்ளி பதக்கம்

சார்ஜன் டிஎம்எஸ்எம் குமாரி இலங்கை இராணுவ மகளிர் படையணி
சார்ஜன் என்.என்.டி சில்வா இலங்கை இராணுவ மகளிர் படையணி
சார்ஜன் டப்ளியுஏகே குலசூரிய இலங்கை இராணுவ மகளிர் படையணி
லான்ஸ் கோப்ரல் எம்ஏஏ சஞ்சீவனி இலங்கை இராணுவ மகளிர் படையணி