Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th October 2023 19:40:52 Hours

லேடன் குத்துச்சண்டை கிண்ணப் போட்டியில் இராணுவ வீரர்களுக்கு 11 தங்கப் பதக்கங்கள்

சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற லேடன் கிண்ண குத்துச்சண்டைப் போட்டியில் இராணுவ குத்துச்சண்டை வீரர்கள் வெற்றியுடன் நிறைவு செய்து 11 தங்கம், 06 வெள்ளி மற்றும் 15 வெண்கலப் பதக்கங்களை பெற்றுள்ளனர்.

முப்படை உட்பட இலங்கையின் முன்னணி குத்துச்சண்டை கழகங்களின் பங்கேற்புடன் ஒக்டோபர் 1 முதல் 4 வரை போட்டிகள் நடைபெற்றன.

லேடன் கிண்ண குத்துச்சண்டை போட்டியானது இலங்கை குத்துச்சண்டை சங்கத்தால் நடத்தப்படும் தேசிய குத்துச்சண்டை போட்டியாகும். இப்போட்டியில் 44 இராணுவ குத்துச்சண்டை வீரர்கள் கலந்து கொண்டு ஆண்கள் பிரிவில் 8 தங்கம், 04 வெள்ளி மற்றும் 13 வெண்கலப் பதக்கங்களையும், பெண்கள் பிரிவில் 3 தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களையும் வென்றனர்.

பெண்கள் பிரிவில் சிறந்த குத்துச்சண்டை வீராங்கனையாக இலங்கை இராணுவ மகளிர் படையைச் சேர்ந்த பெண் சிப்பாய் எச்.கே.என்.எம் பெரேரா அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.

விளையாட்டுப் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் பீ.ஏ.எம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பெருந்திரளான பார்வையாளர்கள் இப்போட்டியை கண்டு களித்தனர்.