Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th October 2023 19:56:25 Hours

இராணுவ முயற்சியில் பூநகரின் மாணவர்களுக்கு 100 ஜோடி காலணிகள்

552 வது காலாட் பிரிகேட் மற்றும் 22 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினர் கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முன்னாள் பட்டதாரி மாணவர்களின் அனுசரணையுடன் திங்கட்கிழமை (ஒக்டோபர் 2) பாடசாலை வளாகத்தில் நடந்த விழாவின் போது பூநகரி வினாசியோடை தமிழ் பாடசாலையின் 100 மாணவர்களுக்கு பாடசாலை காலணியும் அவர்களது பெற்றோருக்கு தென்னம் பிள்ளைகளையும் வழங்கினர்.

சர்வதேச சிறுவர் தினம் மற்றும் எதிர்வரும் இலங்கை இராணுவத்தின் 74 வது ஆண்டு நிறைவை ஒட்டி இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ மற்றும் 55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்கேஎன்சீ ஜயவர்தன ஆர்எஸ்பீ என்டிசீ ஆகியோர் இத்திட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கினர்.

இவ்விழாவில் 100 ஜோடி காலணிகளுடன், தென்னம் பிள்ளைகளும் அந்த மாணவர்களின் பெற்றோருக்கு வழங்கப்பட்டது.

552 வது காலாட் பிரகேட் தளபதி கேணல் டிஎஸஎஸ் ரதலகே ஆரடபிள்யூபீ, அதிகாரிகள், சிப்பாய்கள், மற்றும் அனுசரணையாளர்களின் பிரதிநிதியான திரு.பிரசாத் லொகுபாலசூரிய ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.