Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th October 2023 20:02:01 Hours

61 வது காலாட் படையினர் மாத்தறையில் வெள்ளத்தால் பாதிக்க பட்டவர்களுக்கு நிவாரணம்

ஒக்டோபர் 2 ஆம் திகதி முதல் மாத்தறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 61 வது காலாட் படைப்பிரிவின் 613 வது காலாட் பிரிகேட்டின் 9 வது இலங்கை சிங்கப் படையினர் மற்றும் 2 வது (தொ) கெமுனு ஹேவா படையினர் ஆகியோர் பிரதேச செயலகங்கள், அனர்த்த முகாமைத்துவ நிலையம், பொலிஸ் மற்றும் கடற்படை பணியாளர்களுடன் இணைந்து நிவாரணம் மற்றும் இடமாற்றம் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

திஹாகொட மற்றும் மாலிம்பட பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பிரதேசங்களில் அதிக மழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து மக்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேறும் நிலைக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி, 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதியுடன் இணைந்து இப்பணியை மேற்பார்வையிட்டனர். 613 வது காலாட் பிரிகேட் தளபதியின் கண்காணிப்பு மற்றும் 9 வது இலங்கை சிங்கப் படையினர் மற்றும் 2 வது (தொ) கெமுனு ஹேவா படையினரின் தீவிரமான செயல்பாட்டினால் மக்கள் ஆதரவை பெற்றனர்.

படையினர் மக்களுக்கு நிவாரணம் வழங்கியதுடன், குப்பைகளை அகற்றினர், வீட்டு உடமைகளுக்கு பாதுகாப்பு வழங்கி, வீழ்ந்த மரங்ளை அகற்றி சேதமடைந்த சொத்துக்கள் மற்றும் கூரைகளை சரிசெய்தனர்.

படையினரின் உடனடி நடவடிக்கையானது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சேதங்களை குறைப்பதற்கு உதவியாக இருந்தது.