Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd October 2023 12:09:02 Hours

கதிர்காமத்தில் இராணுவக் கொடிகளுக்கு ஆசிர்வாதம்

எதிர்வரும் 74 வது இராணுவ ஆண்டு தினத்தை முன்னிட்டு (10 ஓக்டோபர்) மத ஆசிர்வத பூஜைகளின் தொடச்சியாக திங்கட்கிழமை (ஒக்டோபர் 02) புனித கதிர்காமம் கிரிவெஹர விகரை மற்றும் கந்தன் கோவிலில் பூஜை நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் இராணுவ அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்து கொண்டனர்.

இராணுவத் தலைமையகம்,தொண்டர் படையணி தலைமையகம், அனைத்துப் பாதுகாப்புப் படைத் தலைமையகங்கள், முன்னரங்கு பராமரிப்புப் பகுதிகள், படைப்பிரிவுகள், பிரிகேட்கள் மற்றும் இராணுவப் பயிற்சி நிலையங்களின் இராணுவ கொடிகள் 'கிரிவெஹர' தூபியை மும்முறை சுற்றி வந்து ஆசீர்வாதங்களுக்காக வைக்கப்பட்டன. அதே நேரத்தில், வருகை தந்தவர்களில் ஒரு பிரிவினர் தூபியை சுற்றி சிறப்பு 'கப்ருகா' பூஜையில் பங்கேற்றதுடன், வளாகத்தில் எண்ணெய் விளக்குகளால் ஒளிரச் செய்து 'கிலான்பச' பூஜையில் இணைந்து கொண்டனர்.

கிரிவெஹர விகரையின் தலைமை பிக்கு வண. கோபவக தம்மிந்த தேரர், மகா சங்க உறுப்பினர்களுடன் சமய வழிபாடுகளை மேற்கொண்டதை தொடர்ந்து பிரதம அதிதி மகா சங்க உறுப்பினர்களுக்கு 'பிரிகர' மற்றும் 'கிலான்பச' வழங்கினார். மத அனுஷ்டானங்களுக்காக கதிர்காமம் விகாரை வளாகத்தில் கொடி ஏந்தியவர்கள் மீண்டும் அணிவகுத்து நிற்கும் முன், வெள்ளைத் தாமரை மலர்களால் சிறப்பு பூஜை மஹாசென் தேவாலயத்தில் இடம்பெற்றது.

அதே சந்தர்ப்பத்தில் இராணுவத் தளபதி அவர்கள் ஆண்டு நிறைவை முன்னிட்டு வணக்கத்தின் அடையாளமாக வரலாற்று மதிப்புமிக்க புனித ஸ்தலத்தின் அபிவிருத்திக்கான நிதிப் பங்களிப்பை வழங்கினார்.

இராணுவக் கொடி ஏந்தியவர்கள் மற்றும் வாத்தியகுழுக்களைக் கொண்ட ஊர்வலம் வளாகத்திற்குச் சென்றது, அங்கு கொடிகள் இராணுவத் தளபதிக்கு வழங்குவதற்காக சிரேஷ்ட அதிகாரிகளால் அடையாளமாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

வளாகத்தில் உள்ள ‘அஷ்டபல போதியா’வில் சமய அனுஷ்டானங்களில் இராணுவத் தளபதி புனித மரத்திற்கு ‘அட்டபிரிகரை’ வழங்கினார்.

கோவிலின்நித்திய பூஜை ('தேவாவ') தொடங்கியதும், கோவிலின் உள் அறைக்கு ஆசீர்வாதத்திற்கான அனைத்து கொடிகளையும் தளபதி வழங்கினார். புனித ஸ்தலத்தின் அபிவிருத்திக்கான மற்றுமொரு நிதி நன்கொடையும் இதே சந்தர்ப்பத்தில் இராணுவத் தளபதியினால் கதிர்காமம் கோவிலின் பஸ்நாயக்க நிலமே அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

வளாகத்தினுள் பக்தர்கள் மத்தியில் சிறிது நேரத்தின் பின்னர் விசேட பொங்கல் பிரசாத விநியோகம் அன்றைய நிகழ்வின் உச்சக்கட்டத்தை எட்டியது, இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ, இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூடபிள்யூஎச்ஆர்ஆர்வீஎம்என்டிகேபி நியன்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, 12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி சீஎஸ் முனசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஜி, பல அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.