Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th September 2023 21:17:09 Hours

மேலும் பத்து சிரேஷ்ட அதிகாரிகள் மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்வு

புதிதாக நிலை உயர்வு பெற்ற பத்து மேஜர் ஜெனரல்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் அழைப்பின் பேரில் (செப்டெம்பர் 13) புதன்கிழமை இராணுவத் தளபதி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு புதிய அதிகாரச் சின்னங்களைப் அணிவித்து வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் பெற்றனர்.

வடமத்திய முன்னரங்க பராமரிப்புப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.கே. ராஜபக்ச ஆர்எஸ்பீ, போர்க்கருவி சேவை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. முனசிங்க ஆர்.எஸ்.பீ எடிஓ, 23 வது காலாட் படைப்பிரிவின், தளபதி மேஜர் ஜெனரல் கே.வி.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் எம்டிஐ மஹாலேகம் டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, இராணுவப் போர்க் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் யூகேடிடிபீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ, பணியாளர் கடமைகள் பணிப்பக பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பீஆர் பத்திரவிதான யூஎஸ்எடபிள்யூசீ பீஎஸ்சீ, மேஜர் ஜெனரல் கேஏஎன் ரசிக்க குமார பீஎஸ்சி (தேசிய பாதுகாப்பு கல்லூரி பாடநெறியில்), பாதுகாப்பு அமைச்சின் இராணுவ தொடர்பு அதிகாரி மேஜர் ஜெனரல் டிபி வெலகெதர ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ, 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஎடபிள்யூஎன்எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ, காணி மற்றும் விடுதி பராமரிப்பு பணிப்பக பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்பீகே மதுரப்பெரும ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ, ஆகியோர் அதிகாரச் சின்னங்களை பெற்றுக்கொண்டனர். அதற்கமைய அனைவரும் உயர் தைரியத்துடன் கடமைகளைச் செய்வார்கள் என்று உறுதியளித்தனர்.

சுமுகமான உரையாடல்கள் மற்றும் வாழ்த்துக்களுக்குப் பின்னர், இராணுவத் தளபதி புதிய இரு நட்சத்திர ஜெனரல்களுக்கு அவர்களின் புதிய அதிகாரத்தைக் குறிக்கும் வகையில் அடையாள ஜெனரலின் வாளை வழங்கினார்.

இராணுவத் தளபதியின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்த அந்த அதிகாரிகள், நிகழ்வின் நினைவாக படங்கள் எடுத்து கொண்டனர்.