Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th September 2023 08:09:32 Hours

இராணுவத் தொண்டர் படையணி பிரதி தளபதி கிழக்கு படையினரின் நிர்வாக விடயங்களை ஆராய்வு

இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் செப்டம்பர் 6 தொடக்கம் 8 வரை, கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின், இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் படையலகுகளில் தரங்கள் மற்றும் நிர்வாகப் பொறிமுறையை ஒழுங்குபடுத்தும் வழக்கமான நிர்வாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஆய்வுத் திட்டமானது இராணுவத் தொண்டர் படையணியின் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் எம்டிகேஆர் சில்வா கேஎஸ்பீ, அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், கொஸ்கம இராணுவத் தொண்டர் படையணியின் தலைமையகத்தின் பணிநிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களால் இந்த ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டன.

இந்த ஆய்வு முக்கியமாக வழக்கமான நிர்வாகப் பணிகள், செயல்பாட்டு அம்சங்கள், பொறுப்புக்கூறல் மற்றும் படையலகின் செயல்திறன் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துகிறது.

வருகை தந்த இராணுவத் தொண்டர் படையணியின் பிரதி தளபதி, இலங்கை இராணுவத்தின் நிர்ணயிக்கப்பட்ட கட்டமைப்புகளுக்கு இணையாக தரமான மேம்பாடு மற்றும் பராமரிப்பை உறுதி செய்வதற்காக படையலகுகளின் நிர்வாக விடயங்களை மறுமதிப்பீடு செய்வதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டினார்.

பிரதித் தளபதி, 3 வது இராணுவ புலனாய்வுப் படையணி, 2 வது (தொ) இலங்கை சமிக்ஞைப் படையணி மற்றும் 11 வது (தொ) இலங்கை சிங்கப் படையணி ஆகிய முகாம்களுக்கு விஜயம் செய்தார். அங்கு முறையே இராணுவ மரபுகளுக்கு இணங்க பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதைகள் வழங்கப்பட்டன.

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஐஜி, 22, 23, மற்றும் 24 வது படைப்பிரிவுகளின் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அந்தந்த படையலகுகளின் அதிகாரிகள் இந்த கலந்துரையாடல்களுக்கு தமது ஒத்துழைப்பை வழங்கினர்.