Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd August 2023 22:13:55 Hours

நலன்புரி பணிப்பகத்தின் ஈ-போர்டல் பல நலன்புரி நன்மைகளுடன் அறிமுகம்

இராணுவ நலன்புரி பணிப்பகத்தின் மாபெரும் பன்முக நலத்திட்டம் புதன்கிழமை (ஓகஸ்ட் 23) காலை இராணுவத் தலைமையகத்தில் அறிமுகபடுத்தப்பட்டது. இத் திட்டம் இராணுவத்தினரின் 'நலன்புரி நிதி' வசதிகள், கடன் வசதிகள், நலன்புரி போன்றவற்றை எளிதாக பாவனை செய்வதற்கு ஈ-போர்டல் (e-Portal) மூலம் இராணுவ தலைமையகத்தில் பணியாற்றும் இராணுவ வீரர்களின் பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏராளமான நிவாரண கொடுப்பனவு அத்தியாவசிய பொருட்கள், மூக்குகண்ணாடிகள், பாடசாலை காலணிகள் போன்றவற்றை ஒரே நேரத்தில் விநியோகிப்பதோடு பலன்கள், தகவல்கள் போன்றவை பெற்று கொள்ளும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டன.

நலன்புரி பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஆர்பீஏஆர்பீ ராஜபக்ச ஆர்எஸ்பீ மற்றும் தகவல் தொழில்நுட்ப பணிப்பகத்தின் கேணல் எம்ஆர் ஹமீம் யூஎஸ்பீ அவர்களின் அழைப்பின் பேரில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

நலன்புரி பணிப்பகத்தின் ஈ-போர்டல் (e-Portal) விட்ஜெட் இராணுவத் தளபதியின் கருத்தியல் வழிகாட்டுதலின்படி இராணுவத்தின் தகவல் தொழில்நுட்ப பணிப்பகத்தில் உள்ள தொழில்நுட்ப அதிகாரிகளால் உருவாக்கப்பட்டது, இதன் மூலம் நலத் திட்டங்களில் விவரங்களை அடைய எளிதான அணுகல் கிடைக்கிறது.

நிகழ்ச்சி நிறைவின் முதல் பிரிவாக மங்கள விளக்கேற்றபட்டபின் புதிய ஈ-போர்டல் (e-Portal) அன்றைய பிரதம அதிதி அறிமுகப்படுத்தினார்.

அதன் பின்னர், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, உபகரண பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜிஆர்ஆர்பீ ஜயவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் இராணுவத் வழங்கல் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்பீஎஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சீ எல்எஸ்சீ ஆகியோர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 பேருக்கு மூக்கு கண்ணாடிகள் விநியோகிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட இராணுவ வீரர்களின் உறவினர்களுக்கு மேலும், தலா ரூ. 7500/= பெறுமதியான 25 உலர் உணவு பொதிகள் மற்றும் ரூ. 1000.00 பெறுமதியான காலணிகளுக்கான 25 வவுச்சர்களும் வழங்கப்பட்டன.

அதேபோன்று, இராணுவக் குடும்பங்களைச் சேர்ந்த 25 மாணவர்கள் அடையாளப்பூர்வமாக பாடசாலை உதவிப் பொதிகளைப் பெற்றுக்கொண்டனர், ஒவ்வொன்றும் ரூ. 7500/= பெறுமதியானது. 2022 ஆம் ஆண்டு தரம் 5 பிலமைப்பரீட்சையில் சித்தியடைந்த தெரிவுசெய்யப்பட்ட 791 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை காலணி ஜோடிகளும் வழங்கப்பட்டன.

புஷ்பகுமார அறக்கட்டளை' கண்ணாடிகளுக்கான நிதியுதவி மற்றும் வரையறுக்கப்பட்ட பாட்டா நிறுவனம் பாடசாலை காலணிகள் மற்றும் பரிசு கொடுப்பணவுகளை விநியோகிப்பதற்கான உதவிகளை வழங்கியது. மீதீ இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் நலன்புரி பணிப்பகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டன.

இறுதியில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள், புஷ்பகுமார அறக்கட்டளையின் தலைவர் திரு ஜகத் புஷ்பகுமார அவர்களுக்கு விசேட பாராட்டு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார். புஷ்பகுமார அறக்கட்டளையின் உறுப்பினர் திரு சுமித் கால்டெரா அவர்கள் இராணுவத் தளபதிக்கு அடையாள நினைவுச் சின்னத்தை வழங்கினார்.

இராணுவத் தளபதி மற்றும் இலங்கை இராணுவத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அனைத்து பயனாலிகள் சார்பாக நன்றியுரையுடன் நிகழ்வு நிரைவு பெற்றது.

உபகரண பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டபிள்யுஎம்ஆர்டபிள்யுடபிள்யுடபிள்யுஎச்ஜேபி வணிகசேகர யுஎஸ்பீ, காலாட் பணிப்பக பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கேபீஎஸ்ஏ பெர்னாண்டோ ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ என்டியு, பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ,சிரேஷ்ட அதிகாரிகள்,அதிகாரிகள், சிப்பாய்கள், வரையறுக்கப்பட்ட பாட்டா நிறுவனத்தின் நிர்வாக தலைவர் கிளைவ் ரோட்ரிகோ மற்றும் பயனாளிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றினர்.