Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th August 2023 21:28:57 Hours

கண்டி தலதா பெரஹெராவுக்கு கொப்பரை தேங்காய் தளபதியால் வழங்கி வைப்பு

வருடாந்த ஸ்ரீ தலதா மாளிகை பெரஹெரா நிகழ்வை முன்னிட்டு உலர் தேங்காய்களை (கொப்பரை) கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமே அவர்களிடம் இன்று காலை (11) இராணுவத் தளபதி, லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களால் கையிருப்பில் இருந்த 20 தொன் கையளிக்கப்பட்டது. இத்திட்டம் தொடர்ந்து 10 வது வருடமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குருநாகல், போயாகனே விஜபாகு காலாட் படையணி தலைமையக படையினர் தமது தென்னம்தோப்பில் இருந்து ஒவ்வொரு வருடமும் இந்த புனித தேவைக்காக தமது பங்களிப்பை வழங்குகின்றனர். பழங்காலம் தொட்டு ஊர்வலத்திற்கு ஒளியை வழங்குவதற்காக கொப்பரைகள் மரபுரீதியாக பயன்படுத்தப்படுகின்றன. பழங்கால அரச பழங்கால மரபுகளை பின்பற்றும் வகையில் படையினர் பல ஆண்டுகளாக இந்த புனித பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதியும் விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்யூஎம்என் மானகே டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் அழைப்பின் பேரில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே ஆகியயோர் கலந்து கொண்டு தியவதன நிலமே திரு. பிரதீப் நீலங்க தேல பண்டார அவர்களிடம் சம்பிரதாய மத அனுஷ்டானங்களுக்குப் பின்னர் கொப்பரையை வழங்கினர்.

பௌத்த கொடிகள் மற்றும் தாமரை பூக்கள் ஏந்திய படையினர் ஊர்வலமாக தலதா மாளிகை வளாகத்திற்கு கொப்பரை தேங்காய்களை கொண்டு சென்றதுடன், தியவதன நிலமே மல்லிகைப் பூக்களை வழங்கி இராணுவத் தளபதியை வரவேற்றார்.

உத்தியோகபூர்வ கையளிப்பு நிறைவடைந்த பின்னர், தியவதன நிலமே மற்றும் இராணுவத் தளபதி தலைமையில் இடம்பெற்ற சுருக்கமான சந்திப்பில், எதிர்வரும் எசல பெரஹரவை நடத்துவது, அதன் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தொடர்புடைய விடயங்கள் குறித்து சில கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். வருடாந்த திருவிழாவின் இந்த தவிர்க்க முடியாத தேவைக்கு இராணுவத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பாராட்டிய தலைவர், அந்த உலர் தேங்காய்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இறுதியில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் மேஜர் ஜெனரல் எஸ்யூஎம்என் மானகே டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஆகியோருக்கு தியவதன நிலமே சிறப்பு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கியதுடன், இந்த 'ரணவிரு உத்தம சேவை பூஜை' மற்றும் இராணுவத்தின் தவறாத பங்களிப்பைப் பாராட்டினார்.

வருடாந்த ஸ்ரீ தலதா பெரஹெரா விழாவை இன்னும் சில நாட்களில் தொடங்குவது புத்தரின் பல் மிகவும் புனித பொருளாக கருதப்பட்டு வணங்கப்படுகிறதுடன் இது பல தலைமுறைகளாக தொடர்ச்சியான மற்றும் உரிமையுடன் தலைவர்களால் பாதுகாக்கப்பட்டு வரும் ஒரு வாழும் நினைவுச் சின்னமாகும். இலங்கையில் அனைத்து தேவால ஊர்வலங்கள், முக்கிய காட்சியுடன் இணைந்து, இராணுவத்தால் பதப்படுத்தப்பட்ட உலர்ந்த தேங்காய்கள் எரிக்கும் நோக்கங்களுக்காக வழங்கப்படுகின்றன.

கண்டியில் வருடாந்த எசல பெரஹெர நிகழ்வின் அடையாளமாக 2013 ஆம் ஆண்டு முதல், பெரஹெராவிற்கு விளக்குகளாக பயன்படுத்துவதற்காக அந்த உலர் தேங்காய்களை தயார்படுத்தும் பணிகள் விஜயபாகு காலாட் படையணியின் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விஜயபாகு காலாட் படையணியின் தோப்புகளில் இருந்து தேங்காய்கள் சேகரிக்கப்பட்டு ஆண்டு முழுவதும் இந்த புனிதமான நோக்கத்திற்காக போயகனேவில் உள்ள விஜயபாகு காலாட் படையணி தலைமையகத்தில் படையினரால் தயார்படுத்தபடுகின்றன.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வுடன் இணைந்திருந்தனர்.