Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th July 2023 21:34:48 Hours

யாழ். படையினரால் ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கு புதிய கட்டிடம்

யாழ். பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 51 வது காலாட் படைப்பிரிவின் 513 வது காலாட் பிரிகேடின் 11 வது இலங்கை இலேசாயுத காலாட் படையினர் யாழ்./வட்டு கார்த்திகன்யா ஆரம்பப் பாடசாலைக்கு புதிய வகுப்பறையை அப் பிரதேசத்தின் நன்கொடையாளர் ஒருவரின் அனுசரணையுடன் நிர்மாணித்து 17 ஜூலை 2023 அன்று மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த புதிய வகுப்பறைக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக இராணுவத் சிப்பாய்களின் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் மனிதவளத்தை நாடிய பாடசாலைகளிடம் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து இப்பள்ளியின் பழைய மாணவரான திரு.வி.தபோதரன் இந்த திட்டத்திற்கு நிதியுதவி வழங்கினார்.

11 வது இலேசாயுத காலாட் படையணி கட்டளை அதிகாரியான மேஜர் கேவிஎஸ்எஸ் விதானகே முழு திட்டத்தையும் மேற்பார்வையிட்டதுடன் மற்றும் மாணவர்களின் நலன்களுக்காக குறுகிய காலத்திற்குள் வெற்றிகரமாக இத்திட்டத்தினை கல்வி நோக்கங்களுக்காக பாடசாலையில் நிலவும் நெரிசலைக் குறைக்கும் நோக்கத்துடன் நிறைவு செய்தார்.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.பீ.கே. ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியு பீஎஸ்சீ அவர்களின் வழிக்காட்டலின் கீழ் 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.டபிள்யூ.பி வெலகெதர ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் 513 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் எம் ஆர் ராசிக் ஆர்எஸ்பீ அவர்களின் ஒருங்கிணைப்பின் கீழ் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

513 வது காலாட் பிரிகேட் தளபதி, 11 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி இரண்டாம் கட்டளை அதிகாரி மேஜர் பீஎச்எஸ்ஜே பத்திரங்க, 11 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி சிப்பாய்கள், வட்டுகர்த்திகன்னிய ஆரம்ப பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.