Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th July 2023 00:17:46 Hours

விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ இராணுவத் தளபதியை சந்திப்பு

விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ ஆர்எஸ்பீ இரண்டு பார், வீஎஸ்வீ யூஎஸ்பீ எம்எஸ்சி (எம்ஒஎ) அமெரிக்கா, எம்எஸ்சி முகாமை (பாதுகாப்பு கற்கைகள்), எம்ஏ ஐஎஸ் மற்றும் எஸ் ஐக்கிய இராச்சியம், பிஎஸ்சி (பாதுகாப்பு கற்கைகள்), எம்ஐஎம் (இலங்கை),எஎம்ஐஇ (இலங்கை), ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை சந்திக்கும் நிமித்தம் இன்று (13) காலை இராணுவத் தலைமையகத்திற்கு வருகை தந்ததையடுத்து அவருக்கு இராணுவ தலைமையகத்தில் மரியாதை வழங்கப்பட்டது.

அவர் இராணுவத் தலைமையகத்திற்குள் வந்தடைந்ததும், இராணுவ சம்பிரதாயத்திற்கமைய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பீ அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களால் வரவேற்கப்பட்டார், பின்னர் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களுக்கு இலங்கை சிங்க படையணியின் படையினரால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களால் வருகை தந்த புதிய விமானப்படைத் தளபதியை மரியாதையுடன் வரவேற்றதுடன், வருகை தந்த விமானப்படைத் தளபதிக்கு அனைத்து இராணுவ பிரதம பதவி நிலை அதிகாரிகள், மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளையும் அறிமுகப்படுத்தினார். பின்னர் ஏயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ குழு படம் எடுக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டார்.

எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே ஆகியோரின் உத்தியோகபூர்வ சந்திப்பின் போது இராணுவத்தினருக்கும் விமானப்படையினருக்கும் இடையில் பல்வேறு கடமைகள் மற்றும் கடந்த காலத்தில் புலிகளின் பயங்கரவாதத்தை ஒழிக்க ஒத்துழைப்பின் நெருக்கமான உறவுகள் மற்றும் விமானப்படையினரின் சிறப்பான பங்களிப்பை இருவரும் நினைவு கூர்ந்தனர்.

இந்த மரியாதை நிமித்தமான சந்திப்பின் போது இருவரும் தங்கள் அமைப்புகளின் பரஸ்பர கருத்துக்களையும் கலந்துரையாடினர். சந்திப்பின் முடிவில், அன்றைய சந்திப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இருவரும் நினைவுப் சின்னங்களை பரிமாறிக் கொண்டனர்.

எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ இராணுவத் தளபதியிடம் இருந்து விடைப்பெற்று செல்லும் முன் தளபதியின் அலுவலகத்தில் உள்ள விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் சில பாராட்டுக் குறிப்புகளை பதிவிட்டார். எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ இலங்கை விமானப்படையின் 19வது தளபதியாக 2023 ஜூன் 30 இலங்கை ஆயுதப்படைகளின் சேனாதிபதியும் ஜனாதிபதியுமான அதிமேதகு ரணில் விக்ரமசிங்க அவர்களால் நியமிக்கப்பட்டார்.

அவர் 1988 ஆம் ஆண்டு ஒக்டோபர் 6 ஆம் திகதி இலங்கை விமானப்படையில் பயிலிளவல் அதிகாரியாக இணைந்து கொண்டார், மேலும் ரத்மலானையில் உள்ள ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்வியற் கல்லூரியில் பாடநெறி இல. 06 இல் தனது அடிப்படை இராணுவப் பயிற்சியை நிறைவு செய்த பின்னர், அவர் அடிப்படை விமானி பயிற்சியை அனுராதபுரம் இலங்கை விமானப்படை தளத்தில் இலக்கம் 1 இல் கற்றார். அவரது அடிப்படை மற்றும் மேம்பட்ட விமானி பயிற்சிக்குப் பிறகு, அவர் 1990 ஒக்டோபர் 05 பொதுப் பணிக்காக விமானிகள் கிளையில் விமானி அதிகாரி நிலையில் நியமிக்கப்பட்டார்.

மனிதாபிமான நடவடிக்கைகளின் போது அவரது துணிச்சலான மற்றும் தன்னலமற்ற பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்காக, எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மூன்று சந்தர்ப்பங்களில் மதிப்புமிக்க வீரப் பதக்கமான "ரண சூரபதக்கம்" வழங்கப்பட்டது. மேலும், அவரது முன்மாதிரியான மற்றும் களங்கமற்ற சேவையின் காரணமாக, எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ “விசிஷ்ட சேவா விபூஷணய” மற்றும் “உத்தமசேவா பதக்கம்” போன்றவற்றால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.