Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd July 2023 11:43:11 Hours

5வது படைக்குழு அமைதி காக்கும் பணிக்காக மாலிக்கு

மாலியில் உள்ள ஐக்கிய நாடுகளின் மினுஸ்மா பணிகளில் பணியாற்றுவதற்காக பயிற்றுவிக்கப்பட்ட 5 வது இலங்கை அமைதிகாக்கும் படைக்குழுவில் 243 இராணுவ வீரர்களில் 170 போர் கொண்ட குழு முதல் கட்டமாக சனிக்கிழமை (ஜூலை 01) மாலை மாலிக்கு புறப்பட்டு சென்றனர்.

இலங்கை சிங்க படையணி படைத்தளபதியும் இராணுவ தலைமையக உபகரண பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் ஜீஆர்ஆர்பீ ஜயவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் அக்குழுவினை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வழி அனுப்பினார்.

மேஜர் ஜெனரல் ஜி.ஆர்.ஆர்.பீ ஜயவர்தன மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் மாலிக்கு செல்லும் முதல் குழுவின் 20 அதிகாரிகள் மற்றும் 150 சிப்பாய்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் அமைதிகாக்கும் படை கட்டளை அதிகாரியான இலங்கை சிங்க படையணியின் கேணல் டபிள்யூ.டபிள்யூ.என்.பீ விக்கிரமாராச்சி மற்றும் இரண்டாம் கட்டளை அதிகாரி இலங்கை கவச வாகன படையணியின் மேஜர் ஏ.டி.பண்டாரநாயக்கயுடன் சில கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.

5 வது இலங்கை அமைதிகாக்கும் படையில் இலங்கை கவச வாகன படையணி, இலங்கை பொறியியல் படையணி, இலங்கை சமிக்ஞைப் படையணி, இலங்கை சிங்க படையணி, இயந்திரவியற் காலாட் படையணி, பொறியியல் சேவை படையணி, இலங்கை இராணுவ சேவைப் படையணி, இலங்கை இராணுவ மருத்துவப் படையணி, இலங்கை இராணுவ போர்கருவிகள் படையணி, இலங்கை மின் மற்றும் இயந்திர பொறியியல் படையணி, இலங்கை இராணுவ பொலிஸ் படையணி, இலங்கை இராணுவ பொது சேவை படையணி மற்றும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உள்ளடங்கியிருப்பதுடன் இலங்கை சிங்க படையணியின் அதிகளவான படையினர் உள்ளடங்குகின்றனர். நினைவுகளைச் சேர்க்கும் வகையில் குழுவினர் விமான நிலையத்தில் இருந்த சிரேஷ்ட அதிகாரிகளுடன் குழு படம் எடுத்துக் கொண்டனர். மீதமுள்ள குழு ஆகஸ்ட் 29 அன்று மாலிக்கு புறப்படும்.

போக்குவரத்து பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் கேஎல்எஸ்எஸ் லியனகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, இலங்கை சிங்க படையணி நிலைய தளபதி பிரிகேடியர் சிஎஸ் திப்பட்டுகே சிரேஷ்ட அதிகாரிகள் சிப்பாய்கள் மற்றும் குழுவின் குடும்பஉறுப்பினர்கள் அவர்களிடம் இருந்து விடைபெறுவதற்காக விமான நிலையத்தில் இருந்தனர்.

முன்னதாக, இலங்கை சிங்க படையணி தலைமையக மைதானத்தில் நடைபெற்ற மரியாதை அணிவகுப்பில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களுக்கு குழுவினால் மரியாதை செலுத்தப்பட்டது.