Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th June 2023 15:08:56 Hours

மினுஸ்மா படைத் தளபதி இலங்கை ஐ.நா அமைதி காக்கும் படையினரின் தொழில்முறை அர்ப்பணிப்பு தொடர்பாக கலந்துரையாடல்

பொதுபணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபீ விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, பீஎஸ்சீ அவர்கள் இராணுவத் தளபதியின் சிறப்புப் பிரதிநிதியாக தற்போது மாலிக்கு விஜயம் செய்துள்ளார். மாலியில் பமாகோவில் உள்ள மினுஸ்மா தலைமையகத்தில் (மினுஸ்மா) ஐ.நா அமைதி காக்கும் பணிக்கான இவ் ஆண்டு செப்டம்பரில் தயாராகும் புதிய மாலி ஐ.நா அமைதி காக்கும் - பீ1 குழு தொடர்பாக ஜெனரல் மியூனியர் ஜீன் மைக்கேலுடன் வியாழக்கிழமை (29) பயனுள்ள கலந்துரையாடலை நடத்தினார்.

இந்த சுமுகமான கலந்துரையாடலில் இலங்கையின் பணியமர்த்தல், மினுஸ்மா கடமை மற்றும் பணிகள் கடந்த சில வருடங்களில் இலங்கையின் அமைதி காக்கும் பணிகளின் முக்கியத்துவம், உயிருக்கு ஆபத்து நிலைமைகள் போன்ற பல பொது விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

பமாகோவில் உள்ள மினுஸ்மா தலைமையகத்தில் உள்ள நடவடிக்கை பணி நிலை அதிகாரி பிரிகேடியர் ஜெனரல் மியூனியர் ஜீன் மைக்கேல் கருத்துப் பரிமாற்றத்தின் போது மினுஸ்மாவில் பணியாற்றும் இலங்கைக் குழுக்களின் நன்கு ஒழுக்கமான செயல்திறன் மற்றும் மாலியில் அமைதி காக்கும் அவர்களின் மிகவும் கடினமான சூழ்நிலைகளில் உறுதியான தொழில்முறை பங்களிப்பை முழுமையாகப் பாராட்டினார். எதிர்காலத்தில் மினுஸ்மாவில் அமைதி காக்கும் வீரர்களை மேலும் பல இலங்கைப் படையினரை நிலைநிறுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ளுமாறும் பொதுபணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபீ விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, பீஎஸ்சீ அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக, பொதுபணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபீ விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, பீஎஸ்சீ அவர்கள் ஐ.நா பொதுச் செயலாளரின் பாதுகாப்பு தளபதியுமான திரு எம். எல்-காசிம் வான் ஆகியோர் இடையில் இலங்கையின் மாலி ஐ.நா அமைதி காக்கும் - பீ1 புதிய திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம் பெற்றன. மாலியின் நிலப்பரப்புகளில் அமைதி காக்கும் படையினரின் நியமிக்கப்பட்ட புதிய நிலைப்பாடு மற்றும் ஏனைய அடிப்படை அம்சங்கள் தொடர்பான நடைமுறை அம்சங்களை அவர்கள் இருவரும் ஆராய்ந்தனர். இலங்கையின் மாலி ஐ.நா அமைதி காக்கும் - பீ1 குழுவில் 22 இராணுவ அதிகாரிகள் மற்றும் 243 சிப்பாய்களும் உள்ளனர்.

இலங்கை இராணுவத்தின் வருகை தந்த பொதுபணி பணிப்பாளர் நாயகம் காவோவில் உள்ள விசேட முகாமிற்கு அழைக்கப்பட்டார். அங்கு 4வது ஐ.நா அமைதி காக்கும் படையினர் தற்போது மாலியில் சேவையாற்றி வரும் அவர்களின் நலன், தேவைகளை மேலும் அறிந்து கொள்வதற்காக அந்தந்த கட்டளை அதிகாரிகள் மற்றும் படையினர்களுடன் கலந்துரையாடினார். இங்கு வருகை தந்த பொதுபணி பணிப்பாளர் நாயகம் அவர்களுக்கு நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

விசேட முகாம் தலைமையகத்திற்கு தனது விஜயத்தின் போது, பொதுபணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபீ விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, பீஎஸ்சீ அவர்கள் மாலியில் கடமையின் நிமித்தம் உயிரிழந்த அனைத்து ஐ.நா. அமைதி காக்கும் போர்வீரர்களின் நினைவாக மலர் அஞ்சலி செலுத்தினார். மாலியில் இப்போது பயன்பாட்டில் உள்ள இலங்கை இராணுவத்தால் தயாரிக்கப்பட்ட போர் வாகனங்கள், கவசப் படை கெரியர்கள், யூனிபபல்ஸ், கவச கார்கள் போன்றவற்றையும் அவர் ஆய்வு செய்தார். ஐ.நா அமைதி காக்கும் ஒருகிணைப்பு பிரிவின் தளபதி கேணல் எஸ்டபிள்யூபீஎம்எச்ஆர் சேனாதீர ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ பீஎஸ்சீ , 4 வது ஐ.நா அமைதி காக்கும் பணியின் வழங்கல் அதிகாரி லெப்டினன் கேணல் எஸ்எம் பண்டாரநாயக்க, 4 வது ஐ.நா அமைதி காக்கும் பணியின் வழங்கல் மற்றும் போக்குவரத்து அதிகாரியான லெப்டினன் கேணல் எச்எம்டபிள்யூஆர் ஹேரத் ஆகியோரும் இணைந்திருந்தனர்.