Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th June 2023 11:25:43 Hours

தளபதியின் வாழ்த்துடன் புகழ்பெற்ற கதிரியக்க வைத்திய நிபுணர் ஓய்வு

கொழும்பு இராணுவ மருத்துவமனையின் ஆலோசகர் கதிரியக்க வைத்திய நிபுணரான இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் மேஜர் ஜெனரல் எஸ்.எச் முனசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ அவர்கள் ஓய்வு பெறுவதை முன்னிட்டு புதன்கிழமை (28) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் அலுவலகத்திற்கு அவரது மனைவியுடன் அழைக்கப்பட்டார்.

ஓய்வு பெறுபவருடனான சந்திப்பின் போது இராணுவத் தளபதி இராணுவத்திற்கும் பொதுவாக நாட்டுக்கும் ஒரு வைத்திய நிபுணராக அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற அவரது பல்வேறு பொறுப்புகள் மற்றும் சேவைகளை பாராட்டினார். மே 2009 க்கு முன்னர் ஒரு சிறந்த மருத்துவ அதிகாரியாக பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் உச்சக்கட்டத்தின் போது அவரது விலைமதிப்பற்ற தியாகங்கள் மற்றும் பாத்திரங்களின் நினைவுகளைப் நினைவுபடுத்தினார். காயமடைந்த போர்வீரர்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்ற பெறும்பங்காற்றியவர்.

37 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவத்தில் பணியாற்றிய அவரது குறிப்பிடத்தக்க பணியின் போது ஆயிரக்கணக்கான சேவையாற்றும் மற்றும் ஓய்வு பெற்ற வீரர்களிடையே சுகாதார வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான அவரது அயராத அர்ப்பணிப்புக்காகவும் இராணுவத் தளபதி அவரைப் பாராட்டினார். "உங்களது சரியான மருத்துவ ஆலோசனைகள் பலரின் உயிரைக் காப்பாற்றியுள்ளன, மேலும் இதுபோன்ற நிகழ்வுகளை இராணுவம் என்றென்றும் நினைவில் வைத்திருக்கும்" என்று இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

37 வருடங்களுக்கும் மேலாக இராணுவத்தில் சேவையாற்றிய மேஜர் ஜெனரல் எஸ்.எச் முனசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ அவர்கள் இராணுவத் தளபதியின் அழைப்பிற்கு நன்றி தெரிவித்ததுடன் மருத்துவ அதிகாரிகாக தனது கடமைகளை நிறைவேற்றுவதில் எப்பொழுதும் அவருக்கு வழங்கிய வழிகாட்டுதலுக்கு தளபதிக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்விற்கு அழைக்கப்பட்ட ஒய்வு பெறும் அதிகாரியின் மனைவியுடன் சில இனிமையான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்ட இராணுவத் தளபதி ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் எதிர்கால முயற்சிகள் மற்றும் திட்டங்களையும் கேட்டறிந்தார். இராணுவத் தளபதி தனது சேவை முழுவதும் மருத்துவ ஆலோசகராக இருந்த சிரஷே்ட அதிகாரிக்கு வழங்கப்பட்ட விலைமதிப்பற்ற ஆதரவைப் பாராட்டியதுடன் குறிப்பாக ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரி தாய்நாட்டைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளின் போது காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளித்தார்.

கலந்துரையாடலின் நிறைவில் லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் எஸ்.எச் முனசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ அவர்களுக்கு பாராட்டு மற்றும் பாராட்டுக்கான சின்னமாக ஒரு சிறப்பு நினைவுச் சின்னம் மற்றும் துணைவிக்கு சிறப்புப் பரிசையும் வழங்கினார்.

மேஜர் ஜெனரல் எஸ்.எச் முனசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ 1986 டிசம்பர் 28 அன்று இலங்கை இராணுவத்தில் நேரடியாக அதிகாரியாக இணைந்துகொண்டார். அவர் கேப்டன் நிலையில் இலங்கை இராணுவ மருத்துவப் படையணியில் நியமிக்கப்பட்டார். அவர் 27 ஜூன் 2011 அன்று மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றார்.

அவர் ஓய்வுபெறும் போது கொழும்பு இராணுவ மருத்துவமனையில் கதிரியக்க வைத்திய நிபுணராக கடமையாற்றுகிறார். மேலும் அவர் 3 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் மருத்துவ அதிகாரி, வடக்கு கட்டளையின் வைத்திய அதிகாரி – பலாலி, யாழ். பாதுகாப்பு படை தலைமையக மருத்துவ அதிகாரி, அம்பாறை பிரதேச தலைமையகத்தின் வைத்திய அதிகாரி, அனுராதபுரம் 21 வது காலாட் படைப்பிரிவின் மருத்துவ அதிகாரி, வன்னி பிரதேச தலைமையகத்தின் வைத்திய அதிகாரி, கொழும்பு இராணுவ மருத்துவமனையின் இரண்டாவது கட்டளைத் அதிகாரி, கொழும்பு இராணுவ மருத்துவமனையின் கட்டளை அதிகாரி, இராணுவ வைத்திய சேவை பணிப்பகத்தின் பணிப்பாளர், இராணுவ தளபதியின் மருத்துவ ஆலோசகர், இலங்கை இராணுவ மருத்துவ படையணி படைத்தளபதி மற்றும் இராணுவ சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகிய பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.

புகழ்பெற்ற இராணுவ மருத்துவ நிபுணரான சிரேஷ்ட அதிகாரி, பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதுடன், மனிதாபிமான நடவடிக்கைகள் உட்பட முக்கிய இராணுவ நடவடிக்கைகளின் போது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தபோதிலும், போர்க்களத்தில் உயிர் அச்சுறுத்தல்களுக்கு சிகிச்சையளிப்பதில் முன்ணனியில் பங்காற்றினார். மருத்துவ அதிகாரியாக போர்க்களங்களில் அவரது வீரம் மற்றும் துணிச்சலுக்காக அவருக்கு ‘ரண விக்ரம பதக்கம்’ மற்றும் ‘ரண சூர பதக்கம்’ வழங்கப்பட்டுள்ளன.

அவர் 2020-2021 காலகட்டத்தில் சுகாதார அமைச்சின் செயலாளராகவும் நாட்டிற்கு பணியாற்றினார்.