Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th June 2023 11:19:03 Hours

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சேவைக்கு இராணுவத் தளபதியின் பாராட்டு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் புதன்கிழமை (28) வடக்கு முன்னரங்கு பராமரிப்பு பிரிவின் தளபதியான இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் எஸ்.ஏ பத்திரன ஆர்எஸ்பீ அவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

மேஜர் ஜெனரல் எஸ்.ஏ பத்திரன ஆர்எஸ்பீ 33 வருடங்களுக்கும் மேலாக நாட்டிற்கு முன்னுதாரணமான முறையில் சேவையாற்றி இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதை முன்னிட்டு தனது குடும்ப உறுப்பினர்களுடன் இராணுவ தளபதியின் அழைப்பின் பேரில் தளபதி அலுவலகத்திற்கு வருகை தந்தார்.

இராணுவத் தளபதியுடன் நடைபெற்ற சந்திப்பின் போது, இருவரும் வாழ்க்கையின் நினைவுகளையும் தடங்களையும் நினைவு படுத்திக் கொண்டனர். அதற்கமைய அவரது எதிர்கால வாழ்கைக்கு லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மே 2009 க்கு முன்னர் ஒரு வழங்கல் அதிகாரியாக பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் உச்சக்கட்டத்தின் போது இராணுவத் தளபதி அவரது அர்ப்பணிப்புப் பாத்திரங்களின் நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார். விருந்தினர்களுடன் சில இன்பங்களைப் பகிர்ந்துகொண்ட இராணுவத் தளபதி, ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் எதிர்கால முயற்சிகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தார். அவர் அவரது சேவை முழுவதும் அவரது குடும்ப உறுப்பினர்களால் வழங்கப்பட்ட விலைமதிப்பற்ற ஆதரவைப் பாராட்டினார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியும் இராணுவத் தளபதியின் வாழ்த்துக்களுக்கும் வழிகாட்டுதலுக்கும் நன்றி தெரிவித்ததுடன், தனது கடமைகளை நிறைவேற்றுவதில் தாம் பெற்ற ஊக்கத்தையும் குறிப்பிட்டார். சந்திப்பில் இறுதியில் லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் குடும்பத்தினருக்கு ஒரு சிறப்பு பரிசுடன் பாராட்டு மற்றும் பாராட்டுக்கான அடையாளமாக பதவி விலகும் மேஜர் ஜெனரல் எஸ்ஏ பத்திரன ஆர்எஸ்பீ அவர்களுக்கு சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கினார்.

மேஜர் ஜெனரல் எஸ்ஏ பத்திரன ஆர்எஸ்பீ அவர்கள் 1989 நவம்பர் 14 இல் இலங்கை இராணுவத்தில் இணைந்தார் அத்துடன் கொத்தலாவல பாதுகாப்பு கல்வியற் கல்லூரி மற்றும் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் பயிலவல் பாடநெறி 34 பி இல் அடிப்படை இராணுவப் பயிற்சி பெற்றார். அவர் இரண்டாம் லெப்டினன் நிலையில் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியில் இணைக்கப்பட்டார். இவர் 2023 ஜூன் 06 ம் திகதி மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.

அவர் ஓய்வுபெறும் போது வடக்கு முன்னரங்க பராமரிப்பு பகுதியின் தளபதி பதவியை வகித்து வருகிறார். மேலும் அவர் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பாடசாலையின் கட்டளை அதிகாரி, 3 வது கவச வாகன படையணியின் மின் மற்றும் இயந்திரப் பொறியியல் பட்டறையின் கட்டளை அதிகாரி, இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியளாலர் பயிற்சி பட்டறை பணிநிலை அதிகாரி (கட்டுபெத்த), மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரி 3, மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரி 2, இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் தள பணிமனையின் (கொழும்பு) கட்டளை அதிகாரி, இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பாடசாலையின் பிரதான பயிற்றுவிப்பாளர், ஹைட்டியில் உள்ள ஐக்கிய நாடுகளின் நிலைப்படுத்தல் பணியின் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையலகு அதிகாரி, 3 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் இரண்டாவது கட்டளை அதிகாரி, இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி தலைமையக மேற்பார்வை அதிகாரி 1 (நிர்வாகம்), 5 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி இராண்டாம் கட்டளை அதிகாரி, இராணுவ தலைமையகத்தின் மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பக பணிநிலை அதிகாரி 1, மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பயிற்சி பாடசாலையின் தளபதி, 5 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி கட்டளை அதிகாரி, இராணுவ தொழில்துறை திட்டத்தின் தளபதி, 68 வது காலாட் படைப்பிரிவின் கேணல் (நிர்வாகம் மற்றும் விடுதி), 11 வது காலாட் படைப்பிரிவின் கேணல் (நிர்வாகம் மற்றும் விடுதி), இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தலைமையகத்தின் பிரிகேடியர் (நிர்வாகம் மற்றும் விடுதி) மற்றும் மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி தலைமையகத்தின் நிலையதளபதி ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.

போர்க்களங்களில் அவரது வீரம் மற்றும் துணிச்சலான செயலுக்கு ‘ரண சூர பதக்கம்’ வழங்கப்பட்டுள்ளது.

மேஜர் ஜெனரல் எஸ்.ஏ. பத்திரன ஆர்எஸ்பீ தனது இராணுவ வாழ்க்கையில் அடிப்படை கணினி பாடநெறி, ஐக்கிய நாடுகளின் பணிநிலை அதிகாரிகள் பாடநெறி, பங்களாதேஷில் இளம் அதிகாரிகளின் அடிப்படைப் பாடநெறி, இந்தியாவில் கூட்டு பயிற்சி அதிகாரிகள் பாடநெறி, சிரேஷ்ட அதிகாரிகளுக்கான மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பாடநெறி மற்றும் செக் குடியரசில் டி-55 ஏஎம் ஐ அடிப்படை யுத்ததாங்கி செயற்பாட்டு பாடநெறி என்பவற்றினை பயின்றுள்ளார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரி பாகிஸ்தானின் லாகூர் பல்கலைக்கழகத்தில் இயந்திர பொறியியல் அறிவியல் பட்டம், மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் எரிசக்தி தொழில்நுட்பத்தில் முதுகலை டிப்ளோமா, டாங்க் சேசிஸ் டிப்ளோமா மற்றும் சீனா மக்கள் விடுதலை இராணுவ கவசப் படைகள் பொறியியல் அகாடமியில் என்ஜின் பழுதுபார்ப்பு ஆகியவற்றைப் பயின்றுள்ளார்.