Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th June 2023 21:34:04 Hours

ஓய்வு பெறும் கஜபா படையணியின் சிரேஷ்ட அதிகாரியின் சேவை நலன் பாராட்டு

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியான கஜபா படையணியின் மேஜர் ஜெனரல் டபிள்யூஆர்எம்எம் ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் 35 வருடங்களுக்கும் மேலாக இராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் செவ்வாய்க்கிழமை (27) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் அழைப்பின் பேரில், அவரது குடும்ப உறுப்பினர்களுடன் இராணுவ தளபதி அலுவலகத்திற்கு வருகை தந்தார்.

கஜபா படையணியின் சிரேஷ்ட அதிகாரியுடனான சந்திப்பின் போது இராணுவத் தளபதி அவரது அர்ப்பணிப்புமிக்க சேவைகள் மற்றும் பல்வேறு பொறுப்புகளை தன்னலமற்ற செயல்பாட்டிற்காக பாராட்டினார். மே 2009 க்கு முன்னர் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் நிறைவின் போது ஓய்வு பெற்றவரின் விலைமதிப்பற்ற தியாகங்கள் மற்றும் பணிகளை நினைவு படுத்தினார்.

மேஜர் ஜெனரல் டபிள்யூஆர்எம்எம் ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் இராணுவத் தளபதியின் அழைப்பிற்கு நன்றி தெரிவித்ததுடன், மத்திய பாதுகாப்பு படைத் தளபதியாக தனது கடமைகளை செயற்திறனாக முன்னெடுக்க தளபதி வழங்கிய வழிகாட்டுதலுக்கு நன்றி தெரிவித்தார்.

இராணுவத் தளபதி அவரது குடும்ப உறுப்பினர்களுடன் சில இன்பங்களைப் பகிர்ந்துகொண்டதுடன், ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் எதிர்கால முயற்சிகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தார். ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரி வீட்டை விட்டு வெளியேறி தாய்நாட்டைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சவாலான காலக்கட்டங்களில் அவரது குடும்ப அங்கத்தவர்கள் சிரேஷ்ட அதிகாரிக்கு வழங்கிய விலைமதிப்பற்ற ஆதரவை இராணுவத் தளபதி பாராட்டினார்.

உரையாடல்களின் முடிவில், லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களால் ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு பாராட்டு மற்றும் பாராட்டு சின்னமாக சிறப்பு நினைவுச் சின்னம் மற்றும் குடும்பத்தினருக்கு சிறப்பு பரிசும் வழங்கினார்.

மேஜர் ஜெனரல் டபிள்யூஆர்எம்எம் ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் 1988 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் இணைந்தார். இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் பயிலிளவல் அதிகாரிகள் பாடநெறி 30 இன் ஊடாக அடிப்படை இராணுவப் பயிற்சியை பெற்றுக் கொண்டதன் பின்னர் அவர் இரண்டாம் லெப்டினன்ட் நிலையில் அதிகாரவாணையளிக்கப்பட்டு கஜபா படையணியில் நியமிக்கப்பட்டார். அவர் 07 மே 2021 அன்று மேஜர் ஜெனரலாக நிலை உயர்வு பெற்றார்.

அவர் ஓய்வுபெறும் வேளையில் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியாக பதவி வகித்து வருகிறார். அவர் 6 வது கஜபா படையணியின் குழு கட்டளையாளர், 8 வது கஜபா படையணி மற்றும் 10 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி, இராணுவத் தலைமையகத்தின் இராணுவ விளையாட்டுக் கட்டுப்பாட்டு பணிப்பகத்தின் பணி நிலை அதிகாரி 2, 6 வது கஜபா படையணியின் இரண்டாம்-கட்டளை அதிகாரி மற்றும் கட்டளை அதிகாரி, கொழும்பு செக்டர் 4 இன் கட்டளை நடவடிக்கைகளின் தளபதி ஆகிய பதவிகளையும் கஜபா படையணியின் பிரதி நிலைய தளபதி., 224 வது காலாட் பிரிகேட்டின் பிரிகேட் தளபதி, 122 வது காலாட் பிரிகேட் தளபதி, இராணுவ தலைமையகத்தின் போக்குவரத்து பணிப்பகம் மற்றும் விளையாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர், 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கதாகும்.

போர்க்களங்களில் அவரது வீரம் மற்றும் துணிச்சலான செயலுக்கு ‘ரண விக்கிரம பதக்கம்’ மற்றும் ‘ரண சூர பதக்கம்’ ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

மேஜர் ஜெனரல் டபிள்யூஆர்எம்எம் ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் தனது இராணுவ வாழ்க்கையில் கம்பனி தளபதிகளின் பாடநெறி, படைப்பிரிவு தளபதிகளின் தந்திரோபாய பாடநெறி, சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகள் அதிகாரிகளுக்கான அடிப்படை பயிற்றுவிப்பாளர் பாடநெறி, சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகள் போன்ற பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாடநெறிகளைப் பின்பற்றினார். அதிகாரிகளுக்கான மேம்பட்ட புத்தாக்கப் பாடநெறி, அடிப்படை பரசூட் பாடநெறி, படைப்பிரிவின் தளபதிகளின் புத்தாக்கப் பாடநெறி, ஐக்கிய நாட்டு அமைதிகாக்கும் பணிகளுக்கான பாடநெறி, பாகிஸ்தான் அதிகாரிகளின் உடற் பயிற்சிப் பாடநெறி, இந்தியா இளம் அதிகாரிகளின் பாடநெறி, இந்தியா கனிஸ்ட கட்டளை பாடநெறி, சீனா காலாட் படை தளபதி பாடநெறி மற்றும் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு மற்றும் போர் பாடநெறி போன்றவற்றையும் பின்பற்றியுள்ளார்.