Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th June 2023 09:46:52 Hours

இலேசாயுத காலாட் படையணியின் மேலும் இரு வீடுகள் திறப்பு

சிப்பாய்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும், உடல் மற்றும் மன மட்டத்தில் அவர்களுக்கு வசதியாக இருப்பதற்கும், இலேசாயுத காலாட் படையணி படையினரால் நிர்மாணிக்கப்பட்ட மேலும் இரண்டு வீடுகள் முதலாவது இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 6 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி ஆகியவற்றின் வீடற்ற இரண்டு வீரர்களுக்கு சனிக்கிழமை (24) வழங்கப்பட்டது. இலங்கை இலேசாயுத காலாட் படையணி போர்வீரர்களுக்கான வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் இவ்வீடுகள் கடுப்பிட்டி மற்றும் மஹாவெலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இந்த பெறுமதிமிக்க செயற்திட்டத்தின் காரணகர்த்தாவான இராணுவ பதவிநிலைப் பிரதானியும் இலங்கை இலேசாயுத காலாட் படையணி படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சீடி வீரசூரிய ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்கள் வீடு கையளிக்கும் நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.

அதன்படி, முதலாவது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினர் தமது ஆள்பலம் மற்றும் தொழில்நுட்ப திறன்களை வழங்கி, குருநாகல், கடுப்பிட்டியில் வசிக்கும் முதலாவது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் வீடற்ற சிப்பாய் ஒருவருக்கு புதிய வீட்டை நிர்மாணித்தனர். அவர் திருமணமாகி இரண்டு பிள்ளைகளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்.

அதேபோன்று, 6 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி கட்டளைப்படி, மஹாவெல, பிஹிபுவவில் திருமணமாகி ஒரு மகளால் ஆசிர்வதிக்கப்பட்ட மற்றொரு தகுதியான இலங்கை இலேசாயுத காலாட் படையணி சிப்பாய்க்கு புதிய வீட்டை நிர்மாணிக்க படையணி தலைமையகம், படையலகு, இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர பிரிவு மற்றும் நன்கொடையாளர்களின் நிதி அனுசரணையுடன் மூலப்பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டன.

இரு படையலகுகளின் கட்டளை அதிகாரிகள் அந்த வீடுகளின் கட்டுமானப் பணிகளை உன்னிப்பாகக் கண்காணித்தனர்.

பல மாதங்களுக்கு முன்னர் இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரின் நலன்களுக்காக இந்த விசேட செயற்திட்டத்திற்கு முன்னோடியாக இருந்த இலங்கை இலேசாயுத காலாட் படையணி படைத் தளபதியும் இராணுவ பதவி நிலைப் பிரதானியுமான மேஜர் ஜெனரல் சீடி வீரசூரிய ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்கள் வீடு கையளிக்கும் வைபவங்களில் கலந்து கொண்டு அடையாளமாக சாவிகள் மற்றும் சில வீட்டு உபகரணங்களையும் வழங்கினார்.

583 ஆவது பிரிகேட் தளபதி, இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தின் பிரதி நிலைய கட்டளைத் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கட்டுப்பிட்டிய மற்றும் மஹாவெலவில் இடம்பெற்ற வீடுகளை கையளிக்கும் நிகழ்வுகளில் பங்குபற்றினர்.