Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th June 2023 17:16:04 Hours

விஜயகபாகு கலாட் படையணியின் வர்ண இரவில் 260 விளையாட்டு சாதனையாளர்களுக்கு விருதுகள்

இராணுவத்தின் மிகவும் போற்றப்படும் காலாட் படையணிகளில் ஒன்றான விஜயபாகு காலாட் படையணி அதன் தோல்வியடையாத வீரத்தின் நிரூபணமான சாதனையுடன், நான்காவது முறையாக வெள்ளிக்கிழமை (23) அன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்றும் கவர்ச்சியான 'வர்ணங்கள்' விருது வழங்கும் விழா-2023 நடைபெற்றது. குருநாகல், போயகனேவில் உள்ள படையணி தலைமையகத்தில் அழைப்பாளர்களின் ஒன்றுகூடலுக்கு மத்தியில், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்கள் இராணுவத் தொண்டர் படையணியின் தளபதியும் விஜயபாகு காலாட் படையணி படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்யுஎம்என் மானகே டப்ளியுடப்ளியுவீ ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சி அவர்களின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் வருகையை அடுத்து மேஜர் ஜெனரல் எஸ்யுஎம்என் மானகே டப்ளியுடப்ளியுவீ ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சி, மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ, இராணுவ வழங்கல் பணிப்பாளர் நாயகம் ஜிஆர்ஆர்பீ ஜெயவர்தன ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ, முதன்மை பணிநிலை அதிகாரிகள் மற்றும் பல சிரேஸ்ட அதிகாரிகள் எளிய ஊர்வலமாக விஜயபாகு பல்நோக்கு மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

பிரதம அதிதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் மங்கள விளக்கை ஏற்றி வைத்தல் மற்றும் படையணி பாடல் இசைத்தல், கண்ணைக் கவரும் கலாசார நடனம் நிகழ்வுகள் மாலை நேரத்தை வண்ணமயப்படுத்தியது. மேஜர் ஜெனரல் எஸ்யுஎம்என் மானகே டப்ளியுடப்ளியுவீ ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சி, முதலில், வரவேற்பு உரையை ஆற்றியதுடன் அன்றைய நிகழ்வின் நோக்கத்தை விளக்கினார்.

2018 முதல் 2022 வரையிலான ஆண்டுகளில் பாதுகாப்புச் சேவைகள், தேசிய மற்றும் சர்வதேச அளவில் பங்குபற்றிய விஜயபாகு விளையாட்டு வீரர்களின் விளையாட்டுத் திறமைகள் மற்றும் திறன்களைப் பாராட்டும் வண்ணம் சில ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைத்து நிலையினர்களையும் ஊக்குவிக்கும் நோக்கில், மீண்டும் தொடங்கப்பட்டது. தேசிய மற்றும் சர்வதேச உயர் வெற்றிகளுக்காக விளையாட்டுத் திறமைகளை மேலும் அதிகரிக்க வேண்டும்.

வர்ண விழாவில், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உட்பட மொத்தம் 260 விளையாட்டு வீரர்களுக்கு 44 விளையாட்டு நிகழ்வுகளுக்காக 'வர்ணங்கள்' வழங்கப்பட்டன. தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் தாய்நாட்டிற்கு மகுடம் சூட்டி விளையாட்டுகளில் சிறப்பாகச் சிறந்து விளங்கிய விஜயபாகு படையினர் அன்றைய பிரதம விருந்தினரிடமிருந்து அவர்களின் பாராட்டுகளைப் பெற மேடைக்கு அழைக்கப்பட்டனர்.

2018-2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மிகவும் பாராட்டப்பட்ட விஜயபாகு காலாட் படையணியின் ஆறு சிறந்த கலைஞர்கள் மற்றும் சாதனையாளர்களுக்கு தளபதி அவர்கள் வெற்றிக் கிண்ணங்களை வழங்கி கௌரவித்தார். அவர்கள் வரும் காலத்திலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என வாழ்த்தினார்.

இராணுவத் தளபதி மேலும் குறிப்பிடுகையில், “இலங்கை இராணுவம் ‘தேசத்தின் பாதுகாவலர்களாக’ தனது சேவைகளை ஆற்றும் போது, சர்வதேச ரீதியிலும் உள்நாட்டிலும் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களை உருவாக்கியுள்ளது. இராணுவத்தின் அந்த மகத்தான பாரம்பரியத்திற்கு விஜயபாகு படையினர் பெருமை சேர்த்தவர் என்பது தெளிவாகிறது. நீங்கள் உங்கள் படையணிக்கும், இராணுவத்துக்கும், நமது தாய்நாட்டிற்கும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பிரதிநிதித்துவப்படுத்தி கௌரவத்தையும் புகழையும் கொண்டு வந்துள்ளீர்கள். அனைத்து வர்ணங்களைப் பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் எதிர்காலத்தில் சிறப்பாக செயல்பட உங்கள் அனைவரையும் ஊக்குவிக்கிறேன்.

இறுதியில், விஜயபாகு 'வர்ண இரவு 2023 நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டமைக்காக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுக்கு விசேட நினைவுச் சின்னம் ஒன்றும் விஜயபாகு படையணியின் படைத் தளபதியும் தொண்டர் படையணி தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்யுஎம்என் மானகே டப்ளியுடப்ளியுவீ ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சி, அவர்களால் வழங்கப்பட்டது.

அதேசமயம், படையணி விளையாட்டுத் திறனை ஊக்குவிப்பதற்காக, எதிர்காலத்தில் விஜயபாகு விளையாட்டு வீரர்களின் விளையாட்டுத் திறனை மேலும் மேம்படுத்துவதற்காக, விஜயபாகு காலாட்படை படையணியின் விளையாட்டு நிதியத்திற்கு ரூ.1 மில்லியன் பணம் பரிசாக இராணுவத் தளபதி வழங்கினார்.

நிகழ்வின் இறுதியில் இலங்கை இராணுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹாரே ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி நன்றியுரை ஆற்றினார் மற்றும் 2023 விஜயபாகு வர்ணங்கள் வழங்கும் விழாவின் உச்சக்கட்டத்தை குறிக்கும் வகையில் சிரேஷ்ட அதிகாரிகள், படையணி பேரவை உறுப்பினர்கள், பணிநிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள் அதிகாரிகள், மற்றும் சிரேஸ்ட விஜயபாகு அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பரபரப்பான மற்றும் கவர்ச்சியான மாலையைக் கண்டுகளித்தனர்.