Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th June 2023 18:15:15 Hours

பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுகளில் இராணுவ விளையாட்டு வீரர்கள் மரதன் போட்டியில் வெற்றி

சனிக்கிழமை (ஜூன் 24) நடைபெற்ற 12 வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டிகளில் மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற இராணுவ வீரர்கள், அனைத்துப் பிரிவுகளிலும் தங்கப் பதக்கங்களை வென்று சிறப்பான விளையாட்டுத் திறன்களை வெளிப்படுத்தினர்.

இலங்கை விமானப்படையால் இம்முறை ஏற்பாடு செய்யப்பட்ட மரதன் ஓட்டத்தில் முப்படையைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது, இராணுவ வீராங்கனைகள் தனிப்பட்ட பிரிவுகளில் 02 தங்கப் பதக்கங்களையும், 01 வெள்ளிப் பதக்கத்தையும், 01 வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டதுடன், ஆண்கள் மற்றும் பெண்கள் குழுப் போட்டிகளிலும் தங்கப் பதக்கங்களைப் பெற்றுக்கொண்டனர். உஸ்வெட்டகெய்யாவ மலிமா கிளப் ஹவுஸில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட மரதன் ஓட்டப் போட்டி 21 கி.மீ தூரத்தை கடந்து அதே தொடக்கப் புள்ளியில் நிறைவடைந்தது.

இலங்கை இராணுவ தடகளப் போட்டிகளின் தலைவர் மேஜர் ஜெனரல் ஆர்ஏஜேஎன் ரணசிங்க ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசி இலங்கை இராணுவ தடகளப் போட்டிகளின் செயலாளர் பிரிகேடியர் விஎம்என் ஹெட்டியாராச்சி ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ ஆகியோருடன் இணைந்து ஆரம்பம் முதலே நிகழ்வில் ஈடுபட்டதுடன் இராணுவ தடகள வீரர்களை வெற்றி பெறுவதற்கு ஊக்குவித்து வழிகாட்டினார்.

பாதுகாப்புச் சேவைகள் விளையாட்டுப் போட்டிகளின் தலைவர், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்வைக் கண்டுகளித்தனர்.

சனிக்கிழமை (ஜூன் 24) நடைபெற்ற 12 வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டிகளில் மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற இராணுவ வீரர்கள், அனைத்துப் பிரிவுகளிலும்முடிவுகள் கீழ்வருமாறு:

ஆண்கள் பிரிவு

தங்கப் பதக்கம் – பணிநிலை சார்ஜன் ஆர்.எம்.எஸ்.புஷ்பகுமார - இலங்கை பீரங்கி படையணி

வெள்ளிப் பதக்கம் - கோப்ரல் கே சண்முகேஸ்வரன் - இலங்கை பீரங்கி படையணி

குழு நிகழ்வு - தங்கப் பதக்கம்

பெண்கள் பிரிவு

தங்கப் பதக்கம் – சிப்பாய் எச்எம்டப்ளியுஜீடப்ளியுஎம் ஹேரத் - இலங்கை இராணுவ மகளிர் படையணி

வெண்கலப் பதக்கம் - சிப்பாய் எச்எம்சிஎஸ் ஹேரத் - இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணி

குழு நிகழ்வு - தங்கப் பதக்கம்